பெண்மைக்கு மை அழகு

பெண்மைக்கு ‘ மை ’ அழகு

பாசத்தில் என்றுமே உரிமை
மதிப்பாய் பேசினால் தண்மை
அன்பு கொண்டால் இருந்திடும் உண்மை
அரவணைப்பில் அறியலாம் உன் தாய்மை
போட்டி என்றால் தெரிந்திடும் உன் வலிமை
பல வெற்றிகளை கடந்திடும் உன் கடமை
புன்னகைத்து இன்னல் புதைத்து
போராடிடும் ஓர் புதுமை
பொறுமையாய் பல பெருமைகள்
நிறைந்தது உம் பெண்மை !

எழுதியவர் : கவிராஜப்பா (30-May-21, 8:07 pm)
சேர்த்தது : கவிராஜப்பா
பார்வை : 68

மேலே