கலிகாலன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கலிகாலன்
இடம்:  புதுச்சேரி
பிறந்த தேதி :  11-Sep-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Aug-2017
பார்த்தவர்கள்:  320
புள்ளி:  3

என் படைப்புகள்
கலிகாலன் செய்திகள்
கலிகாலன் - பொள்ளாச்சி அபி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Dec-2012 10:44 pm

தலைவாரிப் பூச்சூடி
பாடசாலைக்கு செல்ல முடியாப் பிள்ளை..
எழுதுகோலேந்தும் கையில்
கயவரின் நாக்கு போலொரு சாட்டை..

வரிவரியாய் எழுதுமிடமாய்
மாறிப்போன பிஞ்சு முதுகு..
இனிமைத் தமிழாய்
பேசும்வாயில் பிச்சைக்குரல்..

வறுமையின் வரிகளென
வாசிக்கும்போது கசியும் இரத்தத்துளிகள்..
சுதந்திரத்தின் கேவலத்தை
நிரூபிக்கும் உயிர் சாட்சிகள்..!

என் கடவுளேயென
ஒற்றை ரூபாய்க்காய் எம்மையழைத்து
நீளும் கைமுன் உள்ளம்குறுகுதடா..!

கடவுளின் படைப்பில்
பாவப்பலன் இதுவென்றால்
அவனைத் தூக்கில் போடும்வரை
அடித்துக் கொள்ளடா கண்மணி..!

பிள்ளை வயிற்றுப்பசியடங்க
வழிகாணா வல்லமைமிக்க
சுதந்திரநாட்டின் அதிகாரமையங்

மேலும்

மரத்துப்போன இதயங்களுக்கு எப்படி தெரியும் அவர்களின் வலிகள் 17-Jul-2018 9:27 pm
அருமையானப் படைப்பு. சாட்டையடிக்கும் வரிகள் புரட்சிகரமான சிந்தனை துளிகள் ... வாழ்த்துக்கள் .... 23-Aug-2016 6:49 am
உங்கள் தலைப்பு என்னை வெகுவாக ஈர்த்தது.... 22-Aug-2016 11:51 pm
கடந்த கால கவிதைகள் பார்த்த போது கிடைத்த முத்து . பகிர்கிறேன் . தொடருங்கள் .... 18-Sep-2014 6:17 am
கலிகாலன் - C. SHANTHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Apr-2013 4:44 pm

யானை இருந்தாலும்
ஆயிரம் பொன்
இறந்தாலும்
ஆயிரம் பொன்னாம்...

இதனை மிஞ்சுகிறது
என்னுடைய மதிப்பு

இருப்பதினால்
என் சம்பள வரவு

இறந்துவிட்டாலோ
அலுவகத்திலிருந்து
அத்தனை வரவும்...

நான்
விபத்தில் அடிபட்டாலும்
ஆயிரம்பொன்னாய்...

கொட்டிய குருதிக்கும்
சேதப்பட்ட
என் எலும்புகளுக்கும்
சிரசினுள் புகுந்துவிட்ட
நோயறியா வலிகளுக்கும்
சிந்திய கண்ணீருக்கும்
இழப்பீடாய்.... காப்பீடு...

முன் நிறுத்தப்படுகின்றேன்
நீதிபதி முன்னிலையில்..
வலிகள்
விலை பேசப்படுகின்றன
வழக்காடு மன்றத்தில்....

என் வலிகளை
குறைத்து மதிப்பிடுகிறார்
எதிர் தரப்பு வழக்குரைஞர்
காப்பீட்டு ந

மேலும்

படித்ததில் மிகவும் பிடித்த கவிதை.. வாழ்த்துகள்.. 06-Oct-2019 1:40 pm
அன்புக்கு எதற்கு காப்பீடு..ஆசைக்குத்தான் ஈடு இல்லை. 17-Jul-2018 9:25 pm
இது கவிதை மட்டுமில்லை. அத்தனையும் என் அனுபவத்தில் நான் கண்ட வலியுடனான நிஜங்கள். இந்த விபத்து நிகழ்ந்து பின்பு 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு விபத்து. இரண்டாமாவது இன்னும் மோசமானது. மூட்டு எலும்புகள் நொறுங்கி விட்டது. கால் எலும்பும் பிளந்துவிட்டது. 2 இலட்சங்கள் இன்சூரன்ஸ் கிளைம் பெற்றுத் தருவதாக என்னை அணுகினார்கள். எந்த இழப்பீடும் எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டேன். இழப்பீடு பெற்றுத் தருகிறேன் என்று ஒரு கும்பலே கிளம்பி இருக்கிறது அடுத்தவன் வலிகளில் சம்பாதித்துக் கொள்ள என்று நான் வக்கீல், கோர்ட் என்று அலைந்தபோதுதான் உணர்ந்து கொண்டேன். இந்த தொழிலில் மனிதாபிமானம் பார்ப்பவர்கள் மிகக் குறைவு. கோர்ட் வழங்கும் பணத்தில் பாதி நம் கைக்கு வருவதே அதிகம். அத்தனையும் யார் யாருக்கோ பங்கு. நோகாமல் பிறர் வலிகளில் சம்பாதித்து விடுகிறார்கள். தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி. 03-Aug-2015 9:04 pm
சிறந்த கவிதை இப்போதுதான் காண்கிறேன் 02-Aug-2015 8:27 pm
கலிகாலன் - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2014 11:20 pm

வெற்று காகிதங்களை படிக்க
ஊரெல்லாம் காம வாசகர்களை
பெற்று போட்டு போய்விட்டானா அந்த
காம தேவன்.......?

ஆளாளப்பட்ட ஆண்டவனே
ஐந்தே நொடியில்
மூழ்கித்தான் போனான்
மோகினியிடம்...!

ஆறறிவு ஜந்துக்களிடம்
எதை நான்
எதிர்பார்க்க......!

நாணத்தோடு வா
நான்கு சுவர்களுக்குள்
சந்திப்போம்....
என்ற காலம் மாறி,

ஒரு பெண் நாயின்
பின்னால் பாய்ந்து ஓடும்
பத்து தெரு நாய்கள்
போல........

அது சரி
நாய் ஜென்மங்களுக்கு
நடுத்தெரு ஏது...?
நான்கு சுவர்கள்தான் ஏது........?

காம நோய்கொண்ட
ஈனபிறவிகள்
ஈன்றெடுத்த குப்பைகள்
குப்பைகளோடு குப்பைகளாக
குப்பை தொட்டியில்..........!

உழைப்பை வி

மேலும்

வலியான வரிகள் 17-Jul-2018 9:20 pm
மிக அருமையான கவிதை 25-Feb-2018 9:05 pm
நன்று 07-Aug-2017 9:50 pm
அழகையும், ஆனந்தத்தையும் மட்டும் சொல்வதல்ல கவிதை இதுபோல் அவலத்தையும் ஆதங்கத்தையும் சொல்வதுதான் கவிதை. உன் படைப்பு எனும் இந்த நெருப்பு காமர்களை இராமர்களாக மாற்றட்டும். 13-Dec-2015 3:17 pm
கலிகாலன் - ரசீன் இக்பால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jan-2017 6:25 pm

இனியதாம் எந்தன் உலகம்
இயற்கையின் கைவசத்தில்...

காலை விழித்ததும் கண்ணெதிரே
கதிர்பாய்ச்சிடும் செங்கதிரோன்...

மனமயக்கும் மாலைவேளையதில் இரவை
இயக்கவரும் வெண்மதியாள்...

மண்ணினின்று விண்சென்று மாரியாக
மாறிவரும் கார்முகில்...

வெண்ணிலவை முற்றுகையிட்டு யாமும்
அழகுதானெனும் விண்மீன்கள்...

கண்குளிர கணம்கணம் கரைவந்து
கவர்ந்திழுக்கும் அலைதிரை..

புவிசுற்ற வழிசெய்து கம்பீரத்
தோற்றமளிக்கும் நெடுமலைகள்...

மக்களுக்கும் மாக்களுக்கும் பயனளிக்கும்
கிளைவழிக் காடுகள்...

வீழ்ந்தாலும் நல்லோசை எழுப்பி
களிப்பூட்டும் நீரருவிகள்...

மாசுபடுத்தும் மாந்தனுக்கு மாசுநீக்கி
சுவாசமளிக்கும் மரங

மேலும்

வணக்கம் நண்பரே உங்கள் கவிதையை நான் சிறந்த முன்னுரையாகா எனது யூடியூப் தளத்தில் பதிவேற்ற உள்ளேன் உங்கள் பெயருடன்.... மாணவர்கள பேச்சுப்போட்டி இல் பேசுவதற்காக... உங்கள் அனுமதிக்காக காத்திருக்கிறேன் 04-Mar-2023 4:24 pm
மகிழ்ச்சி சகோதரரே! தாமதத்திற்கு மன்னிக்கவும்! ஒரு சில காரணங்களால் எழுத்து தளத்திலிருந்து விலகியிருந்தேன்.. அதனால் பதிலளிக்க தாமதமாகிவிட்டது.. மன்னிக்கவும்! மாணாக்கர் நலனுக்காக் கலைவிழா! அனுமதி கேட்கத் தேவை இல்லையே! 10-Jul-2018 7:32 pm
வணக்கம் நண்பரே..நான் புதுச்சேரியில் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராய் பணிபுரிகிறேன்..மாணவர்களின் கலைவிழாவிற்காக இயற்கை என்ற தலைப்பில் பாடல் தேடியபோது உங்கள் கவிதை கிடைத்தது..சிறுசிறு மாற்றங்களுடன் பாடலாக மாற்றியிருக்கிறேன்..உங்கள் அனுமதி தேவை உங்கள் கவிதையைப் பாட.. 03-Feb-2018 7:38 pm
இறைவன் மகாப்பெரியவன்.. 19-Feb-2017 10:55 am
கலிகாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Aug-2017 3:57 pm

உட்கார்ந்து விளையாடு பாப்பா! -நீ
ஓடியெங்கும் போகாதே பாப்பா!
தனியே போகாதே பாப்பா -அங்கே
தவறேதும் நேர்ந்துவிடும் பாப்பா!
காமவெறியர்களின் உலகம்-கைக்
குழந்தையும் விடுவதில்லை பாப்பா!
ஒலிம்பிகெல்லாம் வேணாமே பாப்பா- உயிரோடிரு போதுமடி பாப்பா!
பயமாய் இருக்குதடி பாப்பா-நீ
பத்திரமாய் திரும்பிடடி பாப்பா!

மேலும்

நிதர்சனமான உண்மை சுடுகிறது 20-Aug-2017 7:38 pm
மனிதர்கள் என்று இப்படிப்பட்ட சிலரை சொல்லும் போது அந்த அர்த்தம் இழிவாகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Aug-2017 7:13 pm
Arumai ezhimai enimai 20-Aug-2017 6:31 pm
கலிகாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2017 5:25 pm

மனப்பொருத்தத்தை விட இனப்பொருத்தமும் பணப்பொருத்தமும்தான் இங்கே மணப்பொருத்தத்தை நிச்சயிக்கின்றன.

மேலும்

உண்மைதான்.. நிகழ்காலம் தூய்மையைக் கூட மாசான கண்ணோட்ட மாக்கி விட்டது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Aug-2017 10:20 pm
மனம் இணையா திருமணம் வெறுமணம் என்பது போகப்போக புரிந்திடும் நண்பா... 19-Aug-2017 6:24 pm
கலிகாலன் - கவிராஜப்பா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Aug-2017 10:23 am

சிரிப்பை விட
உன் கோபத்தை பார்த்து பார்த்து
நீ கோபப்படும் தருணம் வரை எனக்கு மரண நொடிகளே.....

மேலும்

நானும் வந்துவிட்டேன் கவிராஜப்பா 17-Aug-2017 6:23 pm
கலிகாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Aug-2017 6:33 pm

நானும் கனவுகண்டேன் புதிய இந்தியாவிற்காக...
லஞ்சம் இல்லா பாரதம் லட்சியம் என்று ..
பஞ்சம் இல்லா பாரதம் பாக்கியம் என்று..

ஆனால் கருவிலே கலைந்தது கனவு
சாராயம்விற்று சம்பாதித்தவனும்
கஞ்சாவிற்று கல்லா கட்டியவனும்
கட்டப்பஞ்சாயத்தில் காசு பார்த்தவனுமே மாண்புமிகு மந்திரிகள் என் தேசத்தில்.

மேலும்

பணம் தின்னும் முதலைகள் பிணம் தின்னவும் அஞ்சாது... அவர்களது கோரப்பசிக்கு இரை சாமானியன்... 19-Aug-2017 6:28 pm
மக்களை ஏமாற்றி வாழ்க்கையை ஒரு சிலரே பிரித்துக் கொண்டனர் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Aug-2017 1:42 am
மேலும்...
கருத்துகள்

மேலே