நடராஜன் பெருமாள் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : நடராஜன் பெருமாள் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 10-Feb-1975 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 208 |
புள்ளி | : 13 |
சிறு வயதிலிருந்தே கவிதை எழுதுவதில் ஆர்வம். மருத்துவத் தொழில் வயித்துப்பாட்டுக்கு தமிழ்ப்பாட்டு மனதிற்கும் வாழ்வுக்கும்
கவிதையின் பொருட்டு
கற்பனை உலா .
இப்பொருள்
விற்பனைக்கு அல்ல
பதாகையுடன்
மனிதம் .
திசைகள்
ஏதுமற்ற
மேகங்கள்
அது தான்
நிம்மதியென
அறியாமலே
பயணிக்கிறது
திசைகள்
ஏதுமற்ற
மேகங்கள்
அது தான்
நிம்மதியென
அறியாமலே
பயணிக்கிறது
கவிதையின் பொருட்டு
கற்பனை உலா .
இப்பொருள்
விற்பனைக்கு அல்ல
பதாகையுடன்
மனிதம் .
பேசிக்கொண்டு தான்
இருக்கிறேன்
உங்களுக்கு தான்
கேட்கவில்லை
-பூ
மணம் வீசி
காத்திருக்கிறது
மண்,
நிச்சயம்
மனிதன் வந்து
நுகர்வான் என.
வெளிச்சம் வர
காத்திருந்தது
இருட்டு பயத்தில்
ஒளிந்து கொண்ட
தீக்குச்சி...
பற்றி எரிகிறது
காடும்
விறகு வெட்டியின்
வயிறும்
இன் முகம் காட்டி
இனிமையாக பேசி
கவி பல பாடி
பக்கத்தில் அமர்ந்து
பால் கலந்து கொடுத்து
என் உயிரே நீதான்
நீயின்றி நானில்லை
காதல் சொல்லி
நெஞ்சம் வருடி
நெக்குருக நேசித்து
இறுதி வரை
கண் கலங்காது காப்பேன்
உறுதி எல்லாம் அளிக்காமல்,
தன்னுடன் இருப்பது
உயிருள்ள ஒரு உடல்
தேவைகள் ஆசாபாசங்கள்
கொண்ட
மனிதமுள்ள ஒரு மனுஷி என
முதலில் மதிக்க
கற்றுக் கொண்டாலே
போதும் மானிடரே!!
மற்றவை தானே வரும்
தோழர்களே.....
இனி வரவேண்டியது
என்று எதுவுமில்லை
நீ வந்த பிறகு
உன் பெயர் கூட
அதைத்தான் சொல்கிறது
மகிழினி
அடித்து
அடித்து
வெளுக்க
வேண்டியிருக்கிறது
அழுக்கான
இந்த
மனசை....