மகளிர் தின வாழ்த்து
இன் முகம் காட்டி
இனிமையாக பேசி
கவி பல பாடி
பக்கத்தில் அமர்ந்து
பால் கலந்து கொடுத்து
என் உயிரே நீதான்
நீயின்றி நானில்லை
காதல் சொல்லி
நெஞ்சம் வருடி
நெக்குருக நேசித்து
இறுதி வரை
கண் கலங்காது காப்பேன்
உறுதி எல்லாம் அளிக்காமல்,
தன்னுடன் இருப்பது
உயிருள்ள ஒரு உடல்
தேவைகள் ஆசாபாசங்கள்
கொண்ட
மனிதமுள்ள ஒரு மனுஷி என
முதலில் மதிக்க
கற்றுக் கொண்டாலே
போதும் மானிடரே!!
மற்றவை தானே வரும்
தோழர்களே.....