ஒரு தாயின் பரிதவிப்பு

உட்கார்ந்து விளையாடு பாப்பா! -நீ
ஓடியெங்கும் போகாதே பாப்பா!
தனியே போகாதே பாப்பா -அங்கே
தவறேதும் நேர்ந்துவிடும் பாப்பா!
காமவெறியர்களின் உலகம்-கைக்
குழந்தையும் விடுவதில்லை பாப்பா!
ஒலிம்பிகெல்லாம் வேணாமே பாப்பா- உயிரோடிரு போதுமடி பாப்பா!
பயமாய் இருக்குதடி பாப்பா-நீ
பத்திரமாய் திரும்பிடடி பாப்பா!

எழுதியவர் : கலிகாலன் (20-Aug-17, 3:57 pm)
பார்வை : 123

மேலே