கலாம் துதி
வங்கக் கடல் ஈன்ற சிங்க மகன் போற்றி,
தங்கத் தமிழகத்தின் தெய்வமகன் போற்றி,
விண்முட்டும் இமயம் முதல் முக்கடல்சேர் குமரி வரை
புகழ் மண்டிக் கிடக்கும் பாரதத் தாயவளின்
தலைமகனே உத்தமனே போற்றி போற்றி...
கனவுகள் காண கற்றுக்கொடுத்தவர் நீர்,
அக்கனவு மெய்ப்பிக்க அருகில் நின்று தட்டிக்கொடுத்தவரும் நீர்...
இன்று கனவில் மட்டும் காணும் உருவாய் தாம் மாறியது யாராலே?
இச்சோதனை எமக்கு எதனாலே?
பறவையைக் கண்டு பறக்க ஆசை கொண்டாய்,
கூண்டுப்பறவையான எங்கள் மனதிற்கு சுதந்திரமும் அளித்தாய்,
இன்று ஆறடி கூண்டுக்குள் தாம் உறங்கிப் போனால்
தத்தளிக்கும் எங்களுக்கு கலங்கரை விளக்கமும் யாரோ?
இந்தியப் பெருங்கடலின் அலைகளில் ஓங்கி ஒலிக்குது நின் திருப்பெயர்.
இமயம் முட்டும் பருவக்காற்றும் நித்தம் பாடுது தம் திருப்புகழ்.
சாதனைகள் புரிந்து சரித்திரம் ஆனவரே,
வேதனைகள் தந்து பிரிந்தது நியாயமோ?
கள்ளமில்லா பேச்சுடனும்
கலங்மமில்லா சிரிப்புடனும்
கருணைமிக்க நெஞ்சுடனும்
கம்பீரமான தம் அறிவுடனும்
கொஞ்சும் குரலில் சுருளும் முடியில்
மிளிரும் அழகினைக் காண்பது இனிக்
காணொளிக் காட்சியில் மட்டுமே என
எண்ணுகையில் எரிந்து விழுகிறது
எங்கள் மனங்கள் யாவுமே...
தாம் தூவிய விதைகளை சுமந்து நிற்கும் நிலங்கள் நாம்.
வேரூன்றி விருட்சமாய் விரைவினில் விழித்தெழுவோம்.
தம் கனவு பாரதம், விரைவில்
அனைவரும் காணும் பாரதமாய் உருப்பெரும்.
தம் உத்தம வாழ்த்தைகள் இனி எம்மை வழிநடத்தும் சாரதி ஆகட்டும்..
வாழ்க கலாம்...