கனவு பாரதம்

நானும் கனவுகண்டேன் புதிய இந்தியாவிற்காக...
லஞ்சம் இல்லா பாரதம் லட்சியம் என்று ..
பஞ்சம் இல்லா பாரதம் பாக்கியம் என்று..

ஆனால் கருவிலே கலைந்தது கனவு
சாராயம்விற்று சம்பாதித்தவனும்
கஞ்சாவிற்று கல்லா கட்டியவனும்
கட்டப்பஞ்சாயத்தில் காசு பார்த்தவனுமே மாண்புமிகு மந்திரிகள் என் தேசத்தில்.

எழுதியவர் : கலியபெருமாள் (17-Aug-17, 6:33 pm)
Tanglish : kanavu paaratham
பார்வை : 524

மேலே