ரசீன் இக்பால் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ரசீன் இக்பால் |
இடம் | : குளச்சல் (நாகர்கோவில்) |
பிறந்த தேதி | : 11-Jun-2000 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 1925 |
புள்ளி | : 49 |
அண்டத்தின் அதிபதியாம் ஏக நாயனின் திருப்பெயரால்..
வண்டமிழை எந்தன் வாய்மொழியாக்கி அழகுபார்த்த வல்லவனின் புகழ் போற்றி!
முக்கடலும் முத்தமிழும் முத்தமிடும் பெட்டகமாம் கன்னியாகுமரி மாவட்டம், அரபிக்கடலின் அழகுசொட்டும் குளச்சலில் பிறந்தவன்...
வள்ளுவரின் பொற்குறளை
வாழ்வியலாய்ப் போற்றுபவன்..
எந்தன் உள்ளத்தெழுந்த கருத்துக்களை கவியாய்க் கோர்த்து உங்கள் உள்ளமீர்க்க முயல்கிறேன்..
நன்றி! -ரசீன் இக்பால்
உன்னத உலகினில் உன் நல்மனம் பேணியே
இன்புற்று வாழ்ந்திடு மானிடா..
அன்பெனும் அழகியத் தன்மையை என்றுமே
பின்பற்றி ஒழுகிடு மானிடா..
நன்மைகள் புரிந்திடவே எம்மதமும் உரைத்தது
தன்மையாய் செயல்படு மானிடா..
மேன்மக்கள் எம்குலமே என்றந்த வேற்றுமையில்
நின்றிற்ற லாகாது மானிடா!
எண்ணற்ற தீமைகள் தினந்தோறும் புரிந்தோமே
புண்பட்ட ததனாலோ மானிடா..
பண்பொன்றை மாய்த்திட்டுத் துரோகம்தான் இழைத்தோமே
மண்ணிற்கும் மனத்திற்கும் மானிடா..
உண்மைக்கே உன்னை நீ என்றென்றும் அர்பணித்தால்
அண்டத்தில் உயர்வு உனதே மானிடா..
கண்ணிமைத்த நேரமத்தில் உன்னையே இழந்திடுவாய்
உணர்ந்துயிர்த் தெழுந்திடு மானிடா..!!- ரசீன் இக்பால்
ஆற்றங்கரை ஓரம்
மரத்தில் ஆடுகிறது
தூக்குசட்டி
கட்டில் மேல்
ஒய்வு எடுக்கின்றன
பழுத்த இலைகள்
தென்றல் காற்று
தொட்டுச் செல்கிறது
குழந்தையின் விரல்
-J.K.பாலாஜி-
இனியதாம் எந்தன் உலகம்
இயற்கையின் கைவசத்தில்...
காலை விழித்ததும் கண்ணெதிரே
கதிர்பாய்ச்சிடும் செங்கதிரோன்...
மனமயக்கும் மாலைவேளையதில் இரவை
இயக்கவரும் வெண்மதியாள்...
மண்ணினின்று விண்சென்று மாரியாக
மாறிவரும் கார்முகில்...
வெண்ணிலவை முற்றுகையிட்டு யாமும்
அழகுதானெனும் விண்மீன்கள்...
கண்குளிர கணம்கணம் கரைவந்து
கவர்ந்திழுக்கும் அலைதிரை..
புவிசுற்ற வழிசெய்து கம்பீரத்
தோற்றமளிக்கும் நெடுமலைகள்...
மக்களுக்கும் மாக்களுக்கும் பயனளிக்கும்
கிளைவழிக் காடுகள்...
வீழ்ந்தாலும் நல்லோசை எழுப்பி
களிப்பூட்டும் நீரருவிகள்...
மாசுபடுத்தும் மாந்தனுக்கு மாசுநீக்கி
சுவாசமளிக்கும் மரங
சிற்பியின் கைவண்ணத்தில்
சிற்பமாகும் சொற்பப்பாறைபோல்
துன்பமும் இன்பமாகும்
அறிவுடையோர் ஆளுமையால்!
இடர்கண்டு வருந்தாதே
இருகண்கள் கலங்காதே
இடுக்கண் களைந்திடலாம்
தொடர்ந்து நீமுயன்றால்!
பீட்டா ஆதரவாளர் ராதாராஜன் மீது நடவடிக்கை எடுக்கும் வரை பகிருங்கள்
ராதாராஜன் கூறியிருக்கும் வார்த்தை தமிழர்களையும் தாண்டி ஒட்டு மொத்த இந்தியர்களையும் களங்கப்படுத்தும் விதமாக உள்ளது
இன்று மெரினாவில் கூடும் அன்பும் பண்பும் நாட்டுப்பற்றும் தேசப்பற்றும் மிக்க ஒரு எழுச்சி சக்தியை இவ்வாறு கூறும் இவர்
நாளை தன் அமைப்பிற்கு ( பீட்டா ) எற்படும் சிக்கலுக்காக நியாயம் கேட்டு அந்த அமைப்பை சார்ந்தவர்கள் ஒன்றுக்கு கூடி ஆர்ப்பாட்டம் செய்தால் அப்போது அவர்களும் இத்தகைய சொல்லிற்கு ஏற்றவர்களா இருப்பார்கள் என்று ராதா அவர்களே கூறுவது போல் உள்ளது
ஆகையால் ஒட்டு மொத்த இந்தியர்களை இழிவுப் படுத்தி பேசியதற
தமிழா உனதடையாளம் ஜல்லிக்கட்டு
போராடி மீட்டிடதைத் துள்ளிக்கிட்டு
அகிலமே அதிரும்படி மல்லுக்கட்டு
எதிரமைப்பை உனதெதிர்ப்பால் வெளுத்துக்கட்டு!
ஏறுதழுவுதல் எங்கள் வீரவிளையாட்டென
மாறுதட்டி தமிழா சூழுரைத்திடு!
வேறுநாட்டிலிருந்து வந்தெங்கள் பெருமையைத்
தடுக்க நீயாரடா எனமுறைத்திடு!
பீட்டாவிற்கு ஆதரவளிக்கும் ஆட்சியிங்கிருப்பின்
நோட்டாவிற்கே எங்களடுத்த வாக்கு!
காட்டவேண்டாம் உன்வீம்பைத் தமிழனிடத்தில்
உடனடியாகத் தடைநீயே நீக்கு!
சிற்பியின் கைவண்ணத்தில்
சிற்பமாகும் சொற்பப்பாறைபோல்
துன்பமும் இன்பமாகும்
அறிவுடையோர் ஆளுமையால்!
இடர்கண்டு வருந்தாதே
இருகண்கள் கலங்காதே
இடுக்கண் களைந்திடலாம்
தொடர்ந்து நீமுயன்றால்!
இனியதாம் எந்தன் உலகம்
இயற்கையின் கைவசத்தில்...
காலை விழித்ததும் கண்ணெதிரே
கதிர்பாய்ச்சிடும் செங்கதிரோன்...
மனமயக்கும் மாலைவேளையதில் இரவை
இயக்கவரும் வெண்மதியாள்...
மண்ணினின்று விண்சென்று மாரியாக
மாறிவரும் கார்முகில்...
வெண்ணிலவை முற்றுகையிட்டு யாமும்
அழகுதானெனும் விண்மீன்கள்...
கண்குளிர கணம்கணம் கரைவந்து
கவர்ந்திழுக்கும் அலைதிரை..
புவிசுற்ற வழிசெய்து கம்பீரத்
தோற்றமளிக்கும் நெடுமலைகள்...
மக்களுக்கும் மாக்களுக்கும் பயனளிக்கும்
கிளைவழிக் காடுகள்...
வீழ்ந்தாலும் நல்லோசை எழுப்பி
களிப்பூட்டும் நீரருவிகள்...
மாசுபடுத்தும் மாந்தனுக்கு மாசுநீக்கி
சுவாசமளிக்கும் மரங
அரபிக்கடலின் அழகை ரசித்தபடி
அமைதி காத்தவனாய் அமர்ந்திருந்தேன்
அன்றொரு மாலை வேளையில்...
அன்னநடையிட்டு வந்தமர்ந்தாள் பெண்ணொருத்தி
வண்ணப்பட்டுடுத்து வந்தென் சின்ன
மனத்தை வென்றிட்டாள் அப்பேரழகி...
கண்ணைக் கவர்ந் திழுத்திடும்
அவள் பேரழகை வர்ணிக்க
வார்த்தைகள் கோடியாயினும் வசப்படாதே..!
மாந்தளிர் மேனியில் ஆபரணம் பூட்டி
அருவிக் கூந்தலதில் மல்லிப்பூ சூட்டி
கருவிழியோரம் கண்மையும் தீட்டி...
முழுமதி முகமதில் புன்னகைக் காட்டி
முன்வந் தமர்ந்தாள் இளம் சீமாட்டி
முடிவெடுத்திட்டேன் அவள்தான் என் மணவாட்டி..!
கடற்கரை மணலில் அவள் பாதம்
அதுவோ புனிதத் திருக்கோலம்
மணம் வீசிடுமே அம்ம
மரணதண்டனை தீர்ப்பளித்தேன் !!!
அக்குற்றத்திற்கு குற்றமாய்
என் இறுதி நாளும் இந்நாளோ??
- இப்படிக்கு நுனியிழந்த பேனா!!!
பறவை வந்தமர்ந்து சென்ற
பாசம் போகவில்லை-
கையசைக்கும் மரக்கிளை...!
உலகின் ஜனத்தொகை...
இரண்டாம் இடத்தில்
இந்தியா..
இளைஞர்களின்
எண்ணிக்கையிலோ
முதலிடத்தில்...
ஆட்சிகளின் மாற்றத்தில்
அவரவரிடம் இருக்கிற
பணத்தை கையாளும்
விஷயத்திலும்
வரிகள் விதிப்பதிலும்
மட்டுமே எப்போதும்
வருகிறது மாற்றம்...
தனி நபர் வருமானம்
உயர வரவில்லை
இன்னும் மாற்றம்...
வேலை இல்லாதவனுக்கு
வேலை கிடைத்திட
உயர்வாய் வரவில்லை
இன்னும் மாற்றம்...
சிறந்த கல்வியில்
தேர்ந்த மாணவர்கள்
வெளிநாட்டு நிறுவனங்களில்
பணியில் சேர்வதில்
பாங்காய் வரவில்லை
இன்னும் மாற்றம்...
விவசாய விளைநிலங்களில்
விளைபொருள் உற்பத்தியில்
உயர்வாய் வரவில்லை
இன்னும் மாற்றம்...
தொழில்கள் புதிதாய்