உயிர்த்தெழு மானிடா

உன்னத உலகினில் உன் நல்மனம் பேணியே
இன்புற்று வாழ்ந்திடு மானிடா..
அன்பெனும் அழகியத் தன்மையை என்றுமே
பின்பற்றி ஒழுகிடு மானிடா..
நன்மைகள் புரிந்திடவே எம்மதமும் உரைத்தது
தன்மையாய் செயல்படு மானிடா..
மேன்மக்கள் எம்குலமே என்றந்த வேற்றுமையில்
நின்றிற்ற லாகாது மானிடா!

எண்ணற்ற தீமைகள் தினந்தோறும் புரிந்தோமே
புண்பட்ட ததனாலோ மானிடா..
பண்பொன்றை மாய்த்திட்டுத் துரோகம்தான் இழைத்தோமே
மண்ணிற்கும் மனத்திற்கும் மானிடா..
உண்மைக்கே உன்னை நீ என்றென்றும் அர்பணித்தால்
அண்டத்தில் உயர்வு உனதே மானிடா..
கண்ணிமைத்த நேரமத்தில் உன்னையே இழந்திடுவாய்
உணர்ந்துயிர்த் தெழுந்திடு மானிடா..!!


- ரசீன் இக்பால்

எழுதியவர் : ரசீன் இக்பால் (31-Oct-19, 11:35 pm)
சேர்த்தது : ரசீன் இக்பால்
பார்வை : 2944

மேலே