சிறுவணிகர்களின் நிலை

சிற்றெறும்பின் வழித்தடம் போல
மக்களின் படையெடுப்பு பெரிய வணிகர்களை நோக்கி
கடை வீதிகளிலே!

சில்லரைகளையும் சிதற விடுவதில்லை சிறுவியாபரிகளிடத்தில்!

நோட்டுகளை கொட்டிவிடுவர் பகட்டான
பெரும்கடைகளிலே!

வட்டிக்கு வாங்கி வந்த பொருளெல்லாம்
ஈக்கள் கூட மொய்க்க வரவில்லையே!

நான் கூவி விற்கும் வார்த்தைகளெல்லாம்
இவர்கள் செவிபுலனில் ஏறவில்லையே!

பார்த்து பார்த்து வாங்கிய பொருள்களையெல்லாம்
அடுக்கி வைக்க இடமில்லையே!
அழகு கூட்டி அடிக்கி வைத்த பொருள்களை காண இவர்களிடத்தில் மனமில்லையே!

வயிறு ஒட்டி ஒன்றிரண்டு வந்ததடா
பேரம் பேச மனமில்லை கொள்முதல் விலைக்கு வென்றதடா!

வழக்கம் போல பண்டிகையை
அடுத்த வருடத்திற்கு தள்ளி வைத்தோம்!

எழுதியவர் : ச. செந்தில் குமார் (31-Oct-19, 9:20 pm)
பார்வை : 97

மேலே