இந்தப் பிரபஞ்சத்தின் ஒரே தனிக்குரலாக

அந்த வெட்ட வெளியில்
போரோ புயலோ மழையோ எதுவோ
அழித்து அடித்துச் சென்றுவிட்ட
வெம்பரப்பில்
ஒரு பச்சிளங் குழந்தை மட்டும்
அலறி அழுது கொண்டிருந்தது
இந்தப் பிரபஞ்சத்தின் ஒரே தனிக்குரலாக
மானுடம் எனும் மகத்துவத்தின்
அன்புக் கரம் வந்து அணைக்காதா
என்ற ஏக்கத்தில் ....

எழுதியவர் : கல்பனா பாரதி (31-Oct-19, 6:52 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 70

மேலே