உறங்கி போனேன் அம்மா


என் பிஞ்சு விரலால்
உன் கண்ணீர் துடைக்க
என் கைகளைக் உயர்த்தினேன்,
ஏனோ கைகள் அசைய மறுக்கிறது
என் செய்வேன் நான் அம்மா!
என் மழலை மொழி பேசி தேற்ற
எண்ணி முயற்சித்தேன்
என் செப்பிதழோ திறக்க மறுக்குதம்மா! ஓடிவந்து
உன் கண்களை மூடி
என் கண்ணாமூச்சியாட்டத்தில்
எனை தேடி களைத்தாயோ
என்று உனை கட்டி தழுவி
எண்ணினாள் கால்களும் நகர மறுக்கிறது அம்மா!
என் இளவள் எங்கே என
என் தமயன் கேட்டானோ?
என்னோடு கழித்த நாட்களை
எங்ஙனம் அவன் மறப்பானோ!
என் மீது மண்ணும், கல்லும் சரிய சரிய என் மேனியில் பட்ட காயத்தால்
என் ஆவி துடித்தம்மா! இதை சகித்திராத, நம் தாய் மனம் துடித்து
உன் பெற்றவர் அலட்சியத்தால்
என்னுயிரே நீ சிந்திய கண்ணீர் போதும் என,
என்னை தன்னுள் ஏந்தி கொண்டாள்
என்னயிருந்தாலும் அவளும் தாயன்றோ! ஆதலால்
என் மூச்சை அவளுக்கு காணிக்கையாக்கி, இனி
எந்நாளும் நடவாது இப்படி ஒரு சோகம்,
என்ற நம்பிக்கையில் நான்
உறங்கி போனேன் அம்மா!

எழுதியவர் : சங்கீதா தாமோதரன் (31-Oct-19, 6:26 pm)
Tanglish : urangi poanen amma
பார்வை : 231

மேலே