ஏறுதழுவுதல் எங்கள் உரிமை

தமிழா உனதடையாளம் ஜல்லிக்கட்டு
போராடி மீட்டிடதைத் துள்ளிக்கிட்டு
அகிலமே அதிரும்படி மல்லுக்கட்டு
எதிரமைப்பை உனதெதிர்ப்பால் வெளுத்துக்கட்டு!
ஏறுதழுவுதல் எங்கள் வீரவிளையாட்டென
மாறுதட்டி தமிழா சூழுரைத்திடு!
வேறுநாட்டிலிருந்து வந்தெங்கள் பெருமையைத்
தடுக்க நீயாரடா எனமுறைத்திடு!
பீட்டாவிற்கு ஆதரவளிக்கும் ஆட்சியிங்கிருப்பின்
நோட்டாவிற்கே எங்களடுத்த வாக்கு!
காட்டவேண்டாம் உன்வீம்பைத் தமிழனிடத்தில்
உடனடியாகத் தடைநீயே நீக்கு!