சரித்திரம் திரும்புகிறது சல்லிக்கட்டால்

ஆதாய அரசியல்
செய்வோரே !
அரிதார அடிமைகளே !

மானங்கெட்ட
மத்திய அரசே !
தரங்கெட்ட
தமிழக அரசே !

இனியும் உங்கள்
அலங்கார வார்த்தைகளிலும்
அங்க அசைவிலும்
அமிழ்ந்து மடிய மாட்டான்
மறத் தமிழன் !

கல்லணை கட்டினான் தமிழன்
கடாரம் கொண்டான் தமிழன்
இமயத்தில் கொடி ஏற்றினான் தமிழன்
அவ்வைக்கு அமுத கனியளித்தான் தமிழன்
முல்லைக்கு தேர் கொடுத்தான் தமிழன் !

இப்படி பழம்பெருமை
பேசித்திரியும்
பரதேசிக்கும்பல்
என நினைத்தீரோ
எம்மை ! இல்லை
தன்மானத்திற்கு
ஒரு இழுக்கென்றால்
தலை கொடுக்கவும்
தயங்க மாட்டான் தமிழன் !

சல்லிகட்டு மட்டுமல்ல !
எங்களின் எந்த உரிமையையும்
நெல் முனையளவும்
விடுத்தர மாட்டோம் !

கன்னியாகுமரியிலிருந்து
காஞ்சிபுரம் வரை
ஒலிக்கும் உரிமை முரசு !

அதற்கு இனம் இடை நிற்காது !
மதம் மறுப்பு சொல்லாது !

இனி இனம் ஒன்றுதான்
அது தமிழினம் !
மதம் ஒன்றுதான்
அது மனிதம் !

விலை போகாது
எம் வீரம் !

இனி விலக்காத
தடைகளெல்லாம்
தகர்க்கப்படும் தமிழரால் !

ஆம் ! சல்லிக்கட்டால்
சரித்திரம் திரும்பப்போகிறது !

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (18-Jan-17, 11:44 pm)
பார்வை : 171

மேலே