அவள் ஒரு காப்பியம்
காப்பியமாய் நீ இருக்க
நாவலாய் உன்னை நான் படிக்க
சிறுகதையாய் உன் நினைவுகளை
ஹைக்கூ வாக்கி என் சிறு இதயத்தில் புதைத்து வைத்தேன் !
ஒவ்வொரு முறை துடிக்கும் போதும் நீ பெருங்காப்பியமாய்
என் நினைவில் வாசிக்கிறாய் தினம் ஒரு புதுக்கவிதையை !