பொன்மாலைத் தோட்டத்தில்

விடைபெற்றது அந்திக்கதிர் நீலவண்ண மேற்குவானில்
கடைவிரித் ததுமலர்கள் பொன்மாலைத் தோட்டத்தில்
இடைஅசைய நீவந்தாய் மெல்லிய தென்றலுடன்
கடைதிறந்த மலர்கள்பா திமூடி
----வெண் கலிப்பா
விடைபெற அந்திக்க திர்மேற்கு வானில்
கடைவிரிக்கும் மென்பூக்கள் மாலைத்தோட் டத்தில்
இடைஅசைய நீவந்தாய் மெல்லியதென் றல்போல்
கடைப்பூக்கள் மூடுது பார்
----இன்னிசை வெண்பா வாக இப்போது