நதி எனும் நாயகன்
நீ ஒரு சமத்துவவாதி
மேடு பள்ளங்களை பார்க்கமாட்டாய்..
நீ ஒரு தைரியப்போராளி
தடுக்கும் தோல்விகளையும்
தாண்டி வருவாய்....
நீ ஒரு துடிப்பானவன்
உன் பயணத்தில் வேகத்திற்கு பஞ்சமில்லை...
நீ உண்மையான உழைப்பாளி
நேரம் காலம் பார்க்கமாட்டாய்...
நீ எளியவனின் பங்காளி
சிறு புல்லிற்கும் உன் பங்கிருக்கும்..
நீ ஒரு தன்னலம் பாரா தியாகி
உன்னை இடையிடையே எல்லோரும் அள்ளிடலாம்....
நீ ஒரு நிகரில்லா தலைவன்
உன் பின்னால் திரண்டு வரும் பெரும்படையால்..
நீ ஒரு பாசம் கொண்ட பொறியாளன்
பல்லுயிர் புசித்திருக்க புதுப்பாதைகள் அமைத்திடுவாய்..
தவித்திடும் மானிடற்கு
தன்னம்பிக்கை ஊற்றே...
இயற்கை அன்னை ஈன்றெடுத்த
நதியென்னும் நாயகனே...