சன்னலோர கதை -1

சன்னலோர கதை -1
"ஜவுளிக்கடையில் உள்ள நாகரீக அலங்காரத்தில் ஆன சிலையைப் போல், வந்தவர் அனைவரையும் வணங்கிய நிலையில் இருந்த போது ,
"பிரியா நீ அவர்ட்ட ஏதாவுது பேசணும்னு தோணுச்சுனா பேசிட்டு வாங்க"அனுமதி தந்தாள் ராணி
"ஸ்ரீ முதலில் மாடிப்படி ஏற,பிரியா பின் நடந்தாள். காலை ஏழு மணிச்சூரியன் அவர்களை தொந்தரவு செய்யவில்லை,மாடியின் சுவற்றில் மட்டும் ஒரு காகம் மற்றும் பெரிய கண்கள்,நாக்கை வெளியில் தொங்கவைத்து இருக்கும் திருஷ்டி பொம்மையும்"
"காகம் இவர்கள் பேசுவதை கூர்ந்து கவனிக்கும் தொனியில் திரும்பி அமர்ந்தது."
"ஆனால் அந்த பொம்மைக்கு பிரியாவை பற்றி, நன்கு தெரியும்,அந்த பொம்மையின் கண் வழியாக நாம் பார்த்தால் ...."சராசரி
ஆணின் உயரம்,நெற்றியில் வைத்த குங்குமம் பாதி அழிந்த நிலையிலும், வைத்த குங்குமத்தடம் தெரிகின்ற வண்ணம் அவள்".
"சிறுவயதிலிருந்தே பிரியாவிடம் ஒரு இருகிய முகம்,காரணம் தெரியவில்லை...அது அவளுக்கு சௌகரீகத்தை கொடுத்திருந்ததால் அவள் மாற்றவில்லை போலும்,
"உதடு பிரியாமல்,சிறிது மட்டும் நீளும் உதட்டுச்சிரிப்பு,..அந்த ஒரு சிரிப்பிற்காக ஸ்ரீக்கு அவளை பிடிக்கவும் செய்யலாம்.."
"அதிகம் பேசாமல், பேசுவதை சுருக்கமாக பேசுவது மட்டும் இல்லாமல் அதை மற்றவர்க்கு எளிதில் புரியும் வார்த்தைகளைக் கோர்த்துப் பேசுவதில், பிரியாவின் வல்லமைச் சான்று ,அது ஒருவிதத்தில் அவளுக்கு தைரியத்தை கொடுத்தது,அனைவரிடத்திலிருந்தும் வேறுபடுத்தியும் காட்டியது.கானல் நீரில் தாகம் தீர்க்க ஆசைப்படமாட்டாள்.அவள் போல சுருக்கமாக சொன்னால் ....
"நான் ஒரு தனிப்பிறவி,...உங்களுக்கும் எனக்கும் சரிவராதுன்னு தோணுது..."
"கா கா கா "காகம் பறந்து சென்றது ...
"பிரியா முதலில் மாடியில் இருந்து இறங்க,ஸ்ரீ பின் நடந்து வந்தான்"
"ம்மா போலாம்,காரணம் கேக்கவேணாம்.நா வெளிய வெயிட் பண்றேன்.சீக்கிரமா வாங்க...."
"பிரியா சுவற்றோரம் சாய்ந்து கை கட்டி நின்று இருந்தாள், ஸ்ரீ போகும் போது
"ஆல் தி பெஸ்ட் அப்றம் தேங்க்ஸ்...இப்போவே சொன்னதுக்கு முகத்துக்கு நேரா ..."
"ஸாரி சொல்வாள் என்று இருந்தான் ஸ்ரீ..."
"பிரியா அதே புன்னகையுடன் வழியனுப்பிவைத்தாள்..."
"தொடர்ந்து பத்து நிமிடம் கடிகார முள் சுழலும் சப்தம் மட்டும் ப்ரியாவின் வீட்டை நிரப்பி இருந்தது..."
"பிரியா அந்த ஜவுளிக்கடை அலங்காரத்தை மாற்றி சாதாரண பொம்மையாக சமையல் அறைக்கு சென்றாள்"
"ஏன் அந்த பையன புடிக்கல" ராணி சமையல் அறைக்கு கேள்வியை அனுப்பினால் வரவேற்ப்பறையில் இருந்து...பிரகாஷ் அருகில் அமர்ந்து இருந்தான் "
"ராணி. பிரகாஷை மறுமணம் செய்ததை, பிரியா தன் அறியா வயதின் முடிவில் ஒரு நாள் தெரிந்து கொண்டாள்.அந்த நாளில் இருந்து பிரியா அப்பா என்று அழைப்பதில்லை, மரியாதை மட்டும் தந்து பேசுவாள்..ஆனாலும் பிரகாஷ் பிரியாவின் மேல் நம்பிக்கை வைத்து இருந்தான்,என்றாவுது அப்பா என்று அழைத்து ஏற்று கொள்வாள் என்று...
"பிரியா கையில் தட்டுடன் சுவற்றில் சாய்ந்து,ஒரு கால் பிண்ணி நின்று சாப்பிட ஆரம்பித்தாள்.."
"பதில் இன்னும் வரல...ராணி பிரகாஷை பார்த்தாள்.."
"பிரகாஷ்,பிரியாவின் பதிலுக்காக காத்திருந்தான், அவள் எண்ணத்தை அறிய"
"காரணம் சொன்னா ,அங்க என் லிபர்ட்டிஇருக்காது ம்மா...நீங்க அவர்கூட பேச தர்ற சுதந்திரம், என் விருப்பத்த சொல்றப்ப மட்டும் என்னோட எல்லைய சுருக்கறீங்க...மறுபடியும் காரணம் கேட்டா "எனக்கு அவர புடிக்கல","நா வேலைக்கு கிளம்பறேன்.
"பிரகாஷ், ராணியின் கையை பற்றிகொண்டான்...."
"அடுத்து பிரியாவிடம் கேள்வி கேக்க நிறுத்திவிட்டாள் ராணி"
"ம்மா கிளம்பறேன் ,கோவம் இல்லைல" என்று தன் காலணியை மாட்டிக்கொண்டே சமாதன புன்னகையை மட்டும் ராணிக்கு அளித்துவிட்டு, பேருந்து நிலையம் நோக்கி நகர்ந்தாள்...
"அன்று பிரியா பகுதிநேர பணி அனுமதி வாங்கி இருந்ததால்,எப்பொழுதும் செல்லும் பேருந்திற்க்கு செல்ல முடியவில்லை,ஒன்பதுமணிச்சூரியன் கொஞ்சம் ப்ரியாவை களைப்படைய வைத்தது..."
"பிரியா செல்லும் புறத்திற்கு எதிர்புறமாக ராம் நடந்து சென்று கொண்டு இருந்தான்,இருவரும் செல்லும் போது சரியாக ஒரு பேருந்து கடந்து சென்றது,.."
"ராமிற்கு இது புது இடம்,புது மனிதர்கள் ,ஆனால் அதே வேலை,என்பதால் கொஞ்சம் நிம்மதி .இருந்தாலும் செல்லும் வழி நியாபகம் இல்லாததால் திணறித்தான் போயிருந்தான்..."
எதிர்புறம் உள்ள தள்ளுவண்டி கடைக்காரரிடம் "அண்ணா இந்த அட்ரஸ் எங்க இருக்கு ?"
"அட்ரஸ்சை பார்த்துவிட்டு ,தன் தலையை சொரிந்து கொண்டு, இந்த அட்ரஸ்க்கு வழி சொல்லனும்னா ரெண்டு பஸ் மாறி போகணும்...என்று ரோட்டில் செல்வோரை பார்த்துகொண்டே ...தோ அந்த பொண்ணு போகுது பாரு"
"எந்த பொண்ணுனா...?"
"வெள்ள கலர்ல ஷால் போட்டு போகுது பாரு.அந்த பொண்ணு அந்த வழியாத்தான் போகும்.அது பின்னாடியே போ..."
"பின்னாடியேவா!!!..."
"ஆமா பின்னாடிதான்,அட்ரஸ் சொன்னேன்ல பழம் வாங்கிட்டு போப்பா"
"இவர்கள் பேசிக்கொண்டே இருக்கும் போது ஒரு பேருந்து இவர்களை நோக்கி வந்துகொண்டுஇருந்ததை பார்த்த கடைக்காரர் ."
"இந்த பஸ் போகும்ப்பா "
"தேங்க்ஸ் ண்ணா ,நாளைக்கு பழம் வாங்கிக்கிறேன்,என்று ஓட்டம் எடுத்தான்.
"அரசுபேருந்தின் வேகத்தை விஞ்சும் அளவிற்கு ராமின் ஓட்டம் இருந்ததால்,பேருந்து வருவதற்கு முன்னால் ,வெள்ளை நிற துப்பட்டா அணிந்த பெண் பின்னால்,மூக்கு மற்றும் வாய் வழியாக மூச்சு வாங்கி கொண்டு..."
"அல்லோ (ஹலோ வாரத்தை குளறி )....என்று இடுப்பில் இரு கை வைத்து நின்றான்.............
பயணம் தொடரும்