தனிமையின் தவிப்புகள்

தனிமையின் தவிப்புகள்--கயல்விழி

கருவில் சுமந்தவளே-என் கண்ணீரை பார்
அன்னையின் மடியில்
ஆசையாய் பிள்ளைகள்
உறங்கும் போது
இதோ
இவள் மட்டும்
தனிமையில் தாய் மடி
தேடியபடி

உன் கரங்களில் கொடுக்கும்
ஒரு பிடி சோறு-உன்
இதழ்கள் பதிக்கும் ஒரே ஒரு
நெற்றி முத்தம்
இவைகளுக்காய்
ஏக்கங்களுடன் இதோ உன்
மகள்.

அறிவாயா தாயே
தனிமை கொடுமையென
தாயை இழந்தவள்
அனாதையென

என் வலியினை நீ அறிய
வாய்ப்பில்லை
கண்ணீரை துடைத்துவிட-உன்
கல் நெஞ்சில் ஈரமில்லை.

என் மைதீர்ந்த
எழுதுகோலிடம் கேள்
தனிமையின் ரணங்களை
தவிப்போடு சொல்லும்..

தாயவள் உனக்கான என்
துடிப்பை என்
தலையணையிடம் கேள்
விடியாத என் இரவின் வேதனைகளை
விழி நீரோடு சொல்லும்..!

எழுதியவர் : கயல்விழி (24-Mar-16, 12:29 pm)
பார்வை : 1236

சிறந்த கவிதைகள்

மேலே