ஆறாத ரணம்
ஆறுவது சினம்! சொன்ன ஓளவையின்
சொல்பேச்சை கேளாத முன்கோபி முருகனின்
கோபத்திற்கு ஆளான தென்னக மலைகள்
அறுபடை வீடுகளாயின..!
அதன் தாக்கம்தான்
மலைப்பிரதேசங்களில் நட்சத்திர விடுதிகள்!
அழகழகான விடுப்பெடுப்பு குடில்கள்..!
கோடையை கழிக்க விரும்பிச்சென்ற
மலைப்பிரதேசங்களை குப்பைகளாக்கி
வேடிக்கை பார்த்தபடி வீடு திரும்புகிறோம்..!
இப்படி இயற்கையை அழித்து
கட்டிட சமாதிகள் கட்டியதால்
இயற்கை சீற்றங்களின்போது
பாதுகாப்பு இடங்களை நோக்கி
பரதேசிகளாய் பயணப்படுகிறோம்
ஆறாத ரணங்களை சுமந்தபடி..நாம்!