புத்திகெட்ட மனிதனே கேள்

உல்லாச உலகமடா-இதில்
உயிரிழப்பு அதிகமடா
போதைக்கு அடிமைப்பட்டு இங்கு
மனித இனம் மடியுதடா....!

புகையிலையைப் புகைப்பதனால்
புத்துயுர் கிடைத்தாற்போல்
பூரித்துப்போகிறாய் ஏனோ..?

மனிதா......

பொன்னான உன் உடலை
புதைக்குழியில் தள்ளிக்கொள்ளதானோ.....?

வண்ண வண்ணக் குவலைகளில்
வடித்து வைத்த போதைரசம்
உன்னை வாவென்று அழைக்குதடா நாட்டினிலே...!

விலை கேட்டு வாங்கி நீயும்
விரும்பியதைக் குடிப்பதனால்
முடிந்துவிடும் உன் ஆயுள் பாதியிலே...!!

சின்ன சின்னக் காகிதத்தில்
சிங்கார போதைப்பொருட்கள்
சிறகடித்துப் பறக்குதடா பாரினிலே.....!

நீ பணத்தை வீணடித்து
அதை பங்குபோட்டு சுவைப்பதனால்...
பட்டினியால் உன் குடும்பம்
பறிதவிக்கும் வீதியிலே.......!

ஆனந்த வாழ்விதென்று
ஆறறிவு மனிதன் நீ....
ஆடிப்பாடி மகிழ்கிறாய் போதையிலே....!

செம்மையான உன் உடலை
சீரழித்துக் கொண்டதனால்.....

செல்லறித்த உன் சடலம் -இன்று
வீதியுலா போகுதடா பாடையிலே....!!

-சதீஷ் ராம்கி.

எழுதியவர் : சதீஷ் ராம்கி (24-Mar-16, 5:41 pm)
சேர்த்தது : சதீஷ் ராம்கி
பார்வை : 131

மேலே