தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் 1 5 - 47

“ஏதோ ராகம்
மேகம் பாடும் கீதம் !
ஏதோ ராகம்
மேகம் பாடும் கீதம் !”

“இடி இடிக்கும்
மழை பெய்யும்
கண்களிலே..
மின்னல் அடிக்கும் !”

காதல் பாடும் கவிதை யாவும்
காமம் ஆடும் காகிதம் மூலம்

பூக்கள் தேடும் வண்டினமும்
பாக்கள் மூலம் தேன் எடுக்கும்

பருவம் காலம் பறவைகள் கூட
இனவிருத்திக்காக இடம் பெயறும்

இளைய தேகம் நமதுக் கூட
இன்பங்களின் இனிய வரவாகும்

உரிமை நமக்கு உறவால் வருது
உயிரே நீ என் இன்ப பெருக்கு

ஆதாம் ஏவாள் தொடங்கிய காதல்
அன்றும் இன்றும் பவனி வருது

மணம் முடித்த மாலை முதல்
மன்மதங்கள் ஆரம்பம்

ஈரய்ந்து மாதம் கழிந்தால்
கையிலொரு தங்க மகுடம் !

எழுதியவர் : சாய்மாறன் (24-Mar-16, 7:17 am)
பார்வை : 78

மேலே