சிந்திப்பதற்கு ஒரு சீராட்டு

'சிந்திப்பதற்கு ஒரு 'சீராட்டு //

'' சிதைந்து கிடக்கும் மனிதா இதனை
சிந்தி உனக்கு
சிறு மூளையும் பணியாற்றும் ,

'' சிந்தனையை தூண்டு
சிதற விடாதே
சீர்த்திருத்தத்தை கொண்டுவா
சிரமப்படாதே
சிறியவர் இடத்தில் அன்பு செலுத்து
சிருமைக்கொல்லாதே - உனது
சித்தாந்தத்தை (கொள்கையை )
சீர்படுத்து இதனால் பிறரை
சிரிக்க விடாதே //

'' சிறுவர்களின்
சிந்தனையை கேளுங்கள்
சீரு பாம்பை கூட அனுபவமில்லா
சிந்தை கொண்டு கையிலெடுத்து
சீராட்டுவான் இந்த
சிறுவன்
சிறகடிக்கும் பறவையாய் பறக்க
சிந்திப்பான் இந்த
சிறுவன்
சில்லறைக் காசைக்கூட
சிருசேமிப்பின் மூலம்
சிக்கனப்படுத்த சிந்திப்பான் இந்த
சிறுவன் // - மனிதா உன்னை ,,,,

'' சீராட்டி வளர்த்தால் உன் அன்னை
சிரமப்பட்டு வளர்த்தார் உன் தந்தை
சிறப்பாக வளர்க்க உள்ளது நமது
சிங்கார பாரதம் - நீயோ
சீர்கொண்டு வருவதற்கு
சிங்கப்பூர் செல்கிறாயே - இதுதான் உன்னை
சிறப்பாக வளர்த்த
சிங்கார பாரதத்திற்கு நீ செய்யும்
சிறப்பு அம்சமா --- ? ?

'' சிந்தித்து பார்
சிங்காரப் புதல்வா
சிற்ப்பத்தை செதுக்கிய
சிர்ப்பியும் ஓர்
சிந்தனையாளன் ஆவான் - மனிதா
சிந்தி இல்லையே நீ சாவுக்கு முந்தி
சிங்கத்திற்கு தெரியுமா
சிந்திப்பதைப் பற்றி மனிதா இதனை
சீர் செய்வாய் என நம்புகிறேன்
சீக்கிரமாய்
சிகரத்தை எட்டி பிடிப்பாயாக ///

சீராட்டுடன் நான் உங்கள் திருப்பூர் சிவா ,,,,,,,,,,

எழுதியவர் : சிவகவி - திருப்பூர் சிவா (31-Dec-15, 6:15 pm)
பார்வை : 87

மேலே