புத்தாண்டு பெண்ணே வருக
புத்தாண்டு பெண்ணே வருக
புதுப் பொலிவு பூமியில் பெருக
வெண்ணிற ஆடையில் வருக
மண்ணிடை அமைதி நிறுவிட
பொன்னிற உன் மேனி ஒளிர்க
அதில் புவியில் ஞானம் மிளிர்க
எண்ணிய யாவும் கைப்பட
திண்ணிய மன உரம் தருக
மண்ணில் துயரங்கள் மறைய
மாமழையாய் நிறைந்து பொழிக
கண்ணில் படும் தவறை
கடிந்து நீக்க உரம் தருக
பெண்ணினம் அழிக்கும் பதரை
பொங்கி வேரோடு கழைக
கற்பகத் தருவாய் வருக
கருத்துக்கினியதை தருக
யான் நினைத்தவை யாவும் அடைய
இப் புத்தாண்டு இனிதாய் அமைக