நற்றிணைத் தமிழர்

எட்டுத்தொகை பொன் வளர்த் தாயே!
நல் நற்றிணை அவற்றினோர் சேயே!
பெற்ற றெடுத்த பாடல் நானூறு
பாடல் முடித்து வகுத்த திணை.

அழிந்து மறைந்த பாடல் செல்ல
எச்சம் விட்ட முழுப்பாடல் இவையே
இருநூற்று முப்பது நான்கு ஆக
அறிந்தார் நூற்று எழுபத் தைந்து

தெரியா சிரியர் ஐம்பத்து ஒன்மர்
இருந்தினும் பாட்டு புகழ் துதிப்ப
ஒன்பதடி சிற்றின்பம் சிறப்பாய் சிற்பமாய்
பனிரெண்டடி உடைத்து பேரின்பம் பெருக்க.

அகப்பொருள் நிரம்பி நா னூறும்
காதல் துளைக்க நம் முளத்தை
திரை விரிக்கும் ஆட்சிக் கொடை
காதல் நட்பு மகளிர் ஆட்டம்.

காலம் தொட்ட இக்காலம் விட்டா
பழக்கம் சில உரைக்கிறேன் கேளும்
யாமக் காவலர் நல் நாடுகாத்தே
மக்கள் செல்வம் அர ணடைத்தார்.

தீப மொளி திருநாள் அன்றே
வீடு வாசல் விளக் கொளிக்கும்.
பார்க்கு மோர் பெருந்திரள் வேடிக்கை
கயிற்றி னடக்க கழைக்கூத்தாடி நங்கை.

வாச லைழைக்கு மோர் லொலி
பூப்பெண்ணின் கூவு மென் னொலி
கஞ்சி யிட்ட துணியே கண்பறிக்க
பல்லி சகுணம் கண்டே தலைவன்

வரவெண்ணி சுவர் கோடிட்ட காதலி.
ஏற்றி விட்டு ஊஞ்சல் எட்டிப்பார்
மலைக் கப்பால் தலைவன் தன்னூர்
கண் தோற்றும் என்றுரைத்த தோழி

எடுத்துரைக்கும் ஆற் ஆண் பண்பு
கணவன் நலமாய் வர வெண்ணியே
மாலைப் போது சுடறேற்றும் மனைவி
யார் தொகுத்தார் கண் அறியா!

தொகுப்பித்தனன் பாண்டியன் மாறன் வழுதி
முன் இட்டார் முதல் பதிப்பித்து
பின்னத்தூர் நாராயண சாமியாரே,என்றும்
நற்றிணை நல்லதோர் நற்றுணை நமக்கே.

எழுதியவர் : செல்வா.மு(தமிழ் குமரன்) (31-Dec-15, 6:32 pm)
பார்வை : 112

மேலே