வேண்டேன்
18.2.25
வேண்டேன் !
பருவத்தே நெல்பயிர் பருகியது நீரை
பருவம் கணித்தது பயிரின் வயதை
பகலவன் மெய் பரிசோதனை கனிய
பட்டியல் விலை பரவசம் காணுது !
நித்தம் வேண்டிய நிம்மதி எங்கே !
நினையா வாழ்வு நிலுவையில் நிற்க
நிகழ்த்தும் பாடம் நினைவு மறுக்கும்
நிலத்தின் கருணை நீவிர் கேளும் !
பஞ்சம் வேண்டேன் பலரும் வாழ
பக்தி வேண்டேன் பலரும் காய
பல்லவி வேண்டேன் பாடல் ஓங்க
பருக வேண்டேன் பதநீர் ஓய !