தொழிலாளியின் தலைவலி

'' தொழிலாளியின் தலைவலி //

'' ஆம் இது தொழிலாளர் தினம் அல்ல ,
தொழிலை ஆளுபவர் தினம் //
'' ஆம் இது உழைப்பாளர் தினம் அல்ல ,
நம் உழைப்பை ஆளுபவர் தினம் //

'' உழைப்பிற்கும் மனிதன் களைப்பிற்கும்,
வேறுபாடு அறியாதவன் - சில எசமான் //
'' எட்டு மணி நேரப் பணியை ,
எட்டாக் கனியாக்கியவன் - சில எசமான் //
'' உரிமை ,திறமை ,எனச்சொல்லி ,
நம்மை அடிமை -படுத்தியே வைத்துள்ளான் - சில எசமான் //

'' எப்பொழுது தீரும் இந்த உழைப்பாளியின் களைப்பு //
'' எப்பொழுது தீரும் இந்த தொழிலாளியின் தலைவலி //
'' எப்பொழுது தீரும் இந்த எசமான்களின் விசமம்,விசமம்,விசமம் ,,,,,

ஆதங்கத்துடன் உங்கள் சிவகவி ,,,,,,

எழுதியவர் : சிவகவி (4-May-15, 8:07 pm)
பார்வை : 106

மேலே