TRANSLATION OF JAANE KAHAAN WAYI from மேரா நாம் ஜோக்கர்

அந்த நாட்கள் போனதெங்கே
**************************************************

உனக்காகக் காத்திருப்பேன் ..
உன் வழிமீது விழி வைத்திருப்பேன்
உனையே எதிர்பார்த்திருப்பேன்
நீ..எங்கிருந்தாலும்..
என் காதல் மாறாது..உன்னை
என் நெஞ்சும் மறக்காது ..
என்றெல்லாம் ..
என்னிடம் ..
நீ..
சொன்ன நாட்களும்தான்
போனதெங்கே ..?

பாதைகளிலே ..
அந்த வசந்த காலத்தின்
இறுதி நேரத்தில்..
என் கால்தடங்கள்
மீது பதிந்த
உன் முத்தங்கள் கண்டு
வெளியேறிய என்
கண்ணீரின் அளவறிவாயோ..
பெண்ணே..

இன்று என் கண்களிலே
பகலும் கூட இருளானதே
என் நிழல் மட்டுமே
என் துணையாகுதே ..!

(1970ல் வந்த மேரா நாம் ஜோக்கர் என்ற படத்தில் வந்த அருமையான " ஜானே கஹான்" என்ற பாடலின் மொழிபெயர்ப்பு ..என் வரிகளில் )

எழுதியவர் : கருணா (4-May-15, 7:59 pm)
பார்வை : 128

மேலே