பயனற்ற வாழ்வு
மழையாக பிறந்திருந்தாலாவது
இயற்கை அழகினை மாற்றியிருப்பேன்
பறவையாக பிறந்திருந்தாலாவது
வானத்தை என் வசம் ஆக்கியிருப்பேன்
நீராக பிறந்திருந்தாலாவது
உயிர்களின் தாகம் தீர்த்திருப்பேன்
மலராக பிறந்திருந்தாலாவது
இறைவன் காலடிகளை சேர்ந்திருப்பேன்
கதிரவனாக பிறந்திருந்தாலாவது
இருள் அதை போக்கியிருப்பேன்
மரமாக பிறந்திருந்தாலாவது
நிழல் அதை தந்திருப்பேன்
காற்றாக பிறந்திருந்தாலாவது
உயிர் வாழ உதவியிருப்பேன்
நல்ல புத்தகமாய் பிறந்திருந்தாலாவது
கல்வி அறிவினை அளித்திருப்பேன்
என்ன செய்ய மனிதனாய் பிறந்து பணத்தை
மட்டுமே பெரிதாய் நினைக்கும் மானிடர் மத்தியில்
பயனற்ற வாழ்வை அடைந்து விட்டேன்......