மாப்பிள்ளை பார்கின்றார்கள்
எனக்கு மாப்பிள்ளை பார்கின்றார்கள்...
சித்தப்பா கேட்டார் உனக்கு எந்தமாதிரி மாப்பிள்ளை வேணும்மா -அப்பொழுதுதான் நானே யோசிக்க ஆரம்பித்தேன்...
என் அப்பாவை போல கம்பீரமாக இருக்க வேண்டும்.
என் அம்மாவை போல என்னில் அன்பு காட்ட வேண்டும்.
என் தம்பியை போல குட்டி சண்டைகள் போட வேண்டும்.
என் அக்காவை போல என்னை கவனித்துக் கொள்ள வேண்டும்.
என் தோழியை போல ரகசியங்கள் பகிர வேண்டும்.
இவை அனைத்தும் கலந்த ஆண்மகனாய் அன்பில் என்னை ஆள வேண்டும்.
கிடைப்பாரா...???

