கரு மை மதியம் அழகு

அல்லிமலர் கொய்ததனை
பற்றினமென் கரமுடையாள்
பெற்றிருக்கும் முகமதுபொன்
நிறைநிலவு!

துள்ளும் சேல்இல்லக்
குளத்தின்மேல் வீழ்கின்ற
வெள்ளிக் குளிர்பிம்பம்
இனிக்கின்ற அலைநிலவு!

பிள்ளைக் கனியமுதின்
பசிவிலக்கும் பால்சோற்றை
உண்ண நிறைந்திருக்கும்
சிறுவட்டில் வெண்நிலவு!

பிள்ளைக் கனியமுதே,
நிலவெத்தனை நிலவெனினும்
கட்டியெனைக் கன்னமிடும்
உன்கன்னக் கருமையடி, எழில் நிலவு!


*குழந்தை யாரென்று யாருக்கேனும் தெரிகிறதா?! :)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (17-Jul-15, 10:26 am)
பார்வை : 899

மேலே