Monica Ravi - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Monica Ravi |
இடம் | : Tambaram,Chennai. |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 27-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 316 |
புள்ளி | : 57 |
நல்லவனுக்கு நல்லவன் :)
பெண்பால் என்பதை கொஞ்சம் அப்பால் தள்ளிவிட்டேன்!
பிறப்பளித்த பெயரை சற்றே இறக்கி வைத்துவிட்டேன்!
மண் கொடுத்த பெயரை,மறக்க துணிந்துவிட்டேன்!
மனிதன் என்பதையும் எனக்குள் மறைத்தே புதைத்திட்டேன்!
கல்வி தந்த பெயரையெல்லாம் களைந்து கலைத்துவிட்டேன்!
சிவம் என்பதையும் சிந்தைக்குள் பூட்டிவிட்டேன்!
இவை அனைத்தும் தாண்டி நான் யாரென நினைக்கையில்..
'நான் யாரென்ற' தேடலே நான் என அறிந்துவிட்டேன்!!!

'வழி துணையாய் வந்தவளை
வாழ்கை துணையாக்கி
அரைநொடி நீங்காது
சிறைபிடித்தான்...
தன் கரம் கொடுத்தான்...அந்த கைத்தடிக்கு!
குருடனின் காதல் கண்கள் பட்டபோதெல்லாம்
அந்த ஊமை விழிகள் பேசியது-ஆயிரம் மொழிகள்!'
வார்த்தைகளால் வடித்திட முடியாத உணர்ச்சிகள் கற்றுதந்தது....
'காகிதத்தின் வெறுமை' சிறந்த கவிதை என்று !
வார்த்தைகளால் வடித்திட முடியாத உணர்ச்சிகள் கற்றுதந்தது....
'காகிதத்தின் வெறுமை' சிறந்த கவிதை என்று !
கூட்டு கிளிகள் துடிக்கின்றன...
சுதந்திரம் என்னும் கூட்டுகள் அடைய!
என்னை கொன்று விட்டு
என்னுளே எழுதினான் ...
"மரம் வளர்ப்போம் " என்று !
என்னை கொன்று விட்டு
என்னுளே எழுதினான் ...
"மரம் வளர்ப்போம் " என்று !
பட்டதெல்லாம் போதுமென
படாமல் சென்றால்....
உன் ஸ்பரிசம் தொட்ட
தென்றல் பட்டு.....
"பட்டு போன என் காதல்..
இப்போ மொட்டு விட துடிக்குதடா...!!!"