நான் யார்

பெண்பால் என்பதை கொஞ்சம் அப்பால் தள்ளிவிட்டேன்!
பிறப்பளித்த பெயரை சற்றே இறக்கி வைத்துவிட்டேன்!
மண் கொடுத்த பெயரை,மறக்க துணிந்துவிட்டேன்!
மனிதன் என்பதையும் எனக்குள் மறைத்தே புதைத்திட்டேன்!
கல்வி தந்த பெயரையெல்லாம் களைந்து கலைத்துவிட்டேன்!
சிவம் என்பதையும் சிந்தைக்குள் பூட்டிவிட்டேன்!
இவை அனைத்தும் தாண்டி நான் யாரென நினைக்கையில்..
'நான் யாரென்ற' தேடலே நான் என அறிந்துவிட்டேன்!!!

எழுதியவர் : மோனிகா (27-Dec-15, 2:41 pm)
சேர்த்தது : Monica Ravi
Tanglish : naan yaar
பார்வை : 136

மேலே