போராட வாருங்கள் மங்கையர்களே பாகம் -1

பீப் பாடலை
பிதற்றல் சிம்புவை
கண்டித்து குரல்
உயர்த்தி
கோஷம் எழுப்பி
கொடும்பாவி எரித்து
கொட்டும் சாபமிட்டு
கொஞ்சம் நிதானமின்றி
நிதர்சனமும் மறந்து
போராட வாருங்களென
அழைக்கவில்லை
நான் இங்கு..!

அண்ணனின் நிலையில் நின்று
அவலம் போக்க அழைக்கிறேன்
கழிப்பிடம் வசதி இன்றி
அரை நிர்வாணமாய் நிற்கின்றன
அரசு பள்ளிக் கட்டிடங்கள்
இவ்வின்னலை போக்கிடவும்
இறங்கி வந்து போராடுங்களேன்!

தம்பியின் ஸ்தானமேற்று
தவிப்போடு அழைக்கின்றேன்
நாட்டிலுள்ள அக்காள்களை
சீரழிவு சீரியல்களில் இருந்து
மீட்டெடுக்க போராடுங்கள்!

காதலன் இடத்தில் நின்று
கனிவோடு கேட்கட்டுமா?
நெடுங்காலமாய் கேட்கிறாள்
என் காதலி...
நிலவின் ஒளியில்
ஒலியில்லா சாலையில்
கரம் பற்றி கால்நோக
கால் மைலாவது
நடந்து செல்ல ஆசையாம்!
எப்படி கூட்டிச் செல்வது
கூறுகெட்ட குப்பைகள்
குவிந்திருக்கும் தேசத்தில்!

கணவனின் நிலையில்
கவலையோடு கேட்கிறேனே...
பட்ஜெட் வாழ்க்கையிலே
ஓட்டிக் கொள்ளும் வாழ்க்கையிலே
படம் பார்க்க போகணுமென
எப்போதோ என் மனைவி
கேட்டதாய் நியாபகம்...!
இந்த பீடியும், சிகரெட்டும்
திரையில் மட்டும் இன்றி
தியேட்டரிலும் புகையுதே
இருக்கையில் இன்னலுடன்
இசைகேட்டு படம் பார்க்க
எப்படித்தான் முடியுமோ?

தந்தையில் இடத்தில் நின்று
தவிப்போடு கேட்கட்டுமா?
பெண் பிள்ளை பெற்றிட
பேராசை அதிகம் எனக்கு
எப்படி பாதுகாப்பேன்...
பச்சிளம் பிஞ்சுகளையும்
பாலியல் பார்வை பார்க்கும்
இந்த கேடுகெட்ட பாரிலே!
ஐந்தின் மீதும் பத்தின் மீதும்
ஆசைகொள்ளும் ஆண்களுக்கு
அறுத்தெறிய சட்டம் கொடுயென
அழுத்திக் கேட்க மாட்டீர்களா?

பெண்களுக்கு பிரச்சினைகள்
இதனாலும் நடக்கிறதே
போராட வாருவீர்களா
மானமிகு மங்கையர்களே...!

==============
கதிர்மாயா

எழுதியவர் : கதிர்மாயா (27-Dec-15, 2:32 pm)
பார்வை : 129

மேலே