கிடைக்காத புத்தன்

மலையேறிய கால்களின்
தவங்களை
அறிவதில்
ஞானம் கிடைக்கிறது....

பயணத்துள் சிவப்பாய்
புது மரமல்ல
புது சிந்தனை...

காற்றோடும் கனலோடும்
கடக்க கடக்க
உதிர்கையில் மன தேசம்
நிழல் ஆகிறது....

மரணம் தவிப்பதாக
உயிர் தேடும் கண்களில்
மீண்டும் பயணம்...

மொழியாகிய வரிகளில்
எதுகை மோனை கடந்த
கையொப்பமே சாலையில்
சிறந்தது....

சித்தார்த்தனை
தொலைத்தவர்களுக்கெல்லாம்
புத்தன் கிடைப்பதில்லை...

கவிஜி

எழுதியவர் : கவிஜி (27-Dec-15, 12:27 pm)
Tanglish : kidaikkatha butthan
பார்வை : 90

மேலே