நினைவுப்பரண்கள்

ஆசைகளுடன்
கோலங்களிட்டு
விடியல்களில் விழிக்கிறோம்!

கனவுகளுடன்
காட்சிகளினைத்து
காத்திருக்கிறோம்!

நகங்களை கடித்துத்துப்பி
நாட்களை மடித்து வைத்து
நிம்மதியிழக்கிறோம் !

முரண்களுடன்
வீடுகளில்
இணைந்துள்ளோம்;

பரண்களிலெல்லாம்
நினைவுகளைத்தான்
சேமித்து பாதுகாக்கின்றோம்;

நிஜங்கள் நிச்சயமாய் எம் இலக்கு
நீட்டுமந்த நிழல்களில்தானே
நம்பிக்கையுடன் பயணிக்கிறோம்!

எழுதியவர் : செல்வமணி (27-Dec-15, 12:21 pm)
பார்வை : 102

மேலே