எங்கிருக்கிறாரோ

மக்களின் வாக்கை வாழ்க்கையென
வாழும் ஒருவன் எங்கிருக்கிறாரோ?

மக்களின் எதிர்பார்ப்பை அப்படியே
நிகழ்த்தும் ஒருவன் எங்கிருக்கிறாரோ?

மக்களின் தேவையைச் சொல்லாமலே
அறியும் ஒருவன் எங்கிருக்கிறாரோ?

மக்களின் வாழ்க்கையில் ஒன்றென
கலக்கும் ஒருவன் எங்கிருக்கிறாரோ?

மக்களின் மனதைப் புரிந்துச்
செயலாற்றும் ஒருவன் எங்கிருக்கிறாரோ?

அரசியல் என்பதைப் உணர்ந்து
ஆளும் ஒருவன் எங்கிருக்கிறாரோ?

வீண் புகழாரங்களை வெறுத்து
ஒதுக்கும் ஒருவன் எங்கிருக்கிறாரோ?

மக்களின் தொண்டையே நோக்கமாகும்
கொன்டிருக்கும் ஒருவன் எங்கிருக்கிறாரோ?

மொத்தத்தில் மக்களாட்சியை மக்களாட்சியாய்
நடத்தும் ஒருவன் எங்கிருக்கிறாரோ?

எழுதியவர் : அலெக்சாண்டர் (27-Dec-15, 3:17 pm)
பார்வை : 82

மேலே