நிறைகுடம்

சொல்லில் சுத்தம் வேண்டும்
வார்த்தயில் வசீகரம் வேண்டும்

எண்ணத்தில் உயர்வு வேண்டும்
எழுத்தினில் நிறைவு வேண்டும்

பார்வையில் பக்குவம் வேண்டும்
படிப்பதில் புரிதல் வேண்டும்

கவிதையில் பண்பும் வேண்டும்
காண்பதில் உண்மை வேண்டும்

புலமையில் பெருமை வேண்டும்
புரிதலில் முழுமை வேண்டும்

கவிஞனின் புகழும் வேண்டும்
கவிதையின் பொருளும் வேண்டும்

உலகத்தின் பார்வை வேண்டும்
உயர்வினைத் தெரிய வேண்டும்

ஊற்றாக எண்ணம் வேண்டும்
ஊற்றிட கவிஞன் வேண்டும்

ஊருக்காய் எழுத வேண்டும்
உபதேசம் உய்ய வேண்டும்

சீருக்காய் செதுக்கிட வேண்டும்
சிறப்புடன் கவி மிளிர வேண்டும்

ரசிப்பதில் லயிக்க வேண்டும்
ரசனையில் திளைக்க வேண்டும்

போட்டியும் இருக்க வேண்டும்
பொறாமையும் விலக வேண்டும்

நிலைத்திடக் கவிஞன் வேண்டும்
நிறைகுடம் ஆவான் அவனே

எழுதியவர் : பாத்திமாமலர் (27-Dec-15, 4:29 pm)
பார்வை : 190

மேலே