எழுதப்படாத கவிதைகள் 7 யாவரும் கவிஞரே

அள்ளி வைத்தமேகம் - காற்றசைய்க்க
துள்ளி விழும் மழைத்துளிகள்!

அன்பு தைத்தவானம் - நீலக்கடல்என்க
அங்கொரு தோணி நிலா!

நடுநிசி இரவுவானில் - எண்ணிலாதீபங்களாய்
நட்சத்திர படை உலா!

பகலுன்ணும் சூரியன் - சுட்டாலும்
மலர்களது திறப்பு விழா !

இவ்வணைத்தும் உவகையின்றி - காணப்பட்டாநம்
இதயத்துள் கோளாறா?

உண்னிலிருக்கும் உள்ளத்துள் - அன்புகொண்டால்
பார்ப்பனைத்தும் மகிழ்ச்சி விழா!

நல்லறிவு பிறந்தபின்னால் - நாட்டிலே
யாவரும் கவிஞரே!!

எழுதியவர் : பவித்ரன் கலைச்செல்வன் (27-Dec-15, 6:11 pm)
பார்வை : 188

மேலே