ஆரோக்கிய அலெக்சாண்டர் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஆரோக்கிய அலெக்சாண்டர்
இடம்:  வேப்பம்பட்டு, திருவள்ளூர
பிறந்த தேதி :  16-Oct-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Mar-2012
பார்த்தவர்கள்:  1192
புள்ளி:  185

என்னைப் பற்றி...

எதிர்பார்ப்புகளே ஏமாற்றங்களுக்கு காரணம் என வாழ்பவன்...!

என் வலைபக்கங்களைக் காண கீழ்வரும் மின்சங்கிலியைப் பார்க்கவும்:

http://alexintamildesam.blogspot.in/
http://maranamoruthodarkavidhai.blogspot.in/
http://alexinsindhanaikkalanjiyam.blogspot.in/

என் படைப்புகள்
ஆரோக்கிய அலெக்சாண்டர் செய்திகள்
ஆரோக்கிய அலெக்சாண்டர் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Oct-2016 10:14 pm

வானத்தை தொடும் முயற்சியில்
தோல்வி அடைவதால் என்னவோ
தன்னையே மாய்த்துக்கொள்கிறது...!!!

மேலும்

ஆனாலும் அவைகள் பலரின் வாழ்க்கையையும் அழித்து விடுகிறது 29-Oct-2016 9:01 am
ஆரோக்கிய அலெக்சாண்டர் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Oct-2016 10:10 pm

காதலிக்கும்போது நிறைய
பொய் சொல்லுங்கள் -- ஏனெனில்
திருமணத்திற்குப் பின் பெண்கள்
அதிகம் பொய்களை மட்டுமே
நினைவில் வைத்திருக்கிறார்கள்...!!!

மேலும்

உண்மைதான் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் 29-Oct-2016 9:00 am
ஆரோக்கிய அலெக்சாண்டர் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Oct-2016 5:49 pm

உணவையே மருந்தாய் உட்கொண்ட காலம்போய்
மருந்தையே உணவாய் உட்கொள்ளும் காலமிது!

பாட்டியை கிராமத்தில் ஒளித்துவிட்டு
பாட்டி வைத்தியத்தைத் இணையத்தில் தேடும் காலமிது!

பாட்டனும் பூட்டனும் சேர்த்த சித்த வைத்தியத்தை
வெள்ளைக் கோட்டிற்கு அடகு வைக்கும் காலமிது!

அப்பனையும் அம்மையையும் காப்பத்தில் விடுவிட்டு
நாமோ மருத்துவமனையில் சரணடைந்தோம்!

பத்தியத்தில் வைத்தியம் செய்து சாதித்தவரெல்லாம்
அலைவரிசையில் கூவி அழைக்க வைத்திட்ட காலமிது!

வெள்ளைக்காரர்களுக்கு நாம்தான் அடிமைப்பட்டிருந்தோம்
நமது வைத்தியத்தை ஏன் மறந்துப் போனோம்?

பண்டிகைகளுக்கு பலகாரம் செய்யும்போதே அதற்கான
உபாய மருந்தையும் சேர்த்தே

மேலும்

கடந்தவை எல்லாம் வெறும் நினைவாக மட்டும் இருக்கிறது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் 29-Oct-2016 8:33 am

மனிதா! நீ கொன்ற எத்தனை பெண் சிசுக்கள் கொல்லாமல் விடப்பட்டிருந்தால் மேலும் பல பதக்கங்கள் வென்றிருக்கலாமோ...???

மேலும்

நன்றி நண்பரே 23-Aug-2016 3:08 pm
நன்றி நண்பரே 23-Aug-2016 3:08 pm
நன்றி நண்பரே 23-Aug-2016 3:08 pm
காலத்தின் சோதனை.... 22-Aug-2016 11:11 am

இத்தனை நாளாய் நடந்தது நாடகம் என்பதை இப்போது நடித்தேக் காட்டுகிறது சட்ட மாமன்றம்!!!

மேலும்

நன்றி நண்பரே 23-Aug-2016 3:07 pm
நன்றி நண்பரே 23-Aug-2016 3:07 pm
வேடம் தரித்தார் நடித்துக் கொண்டிருக்கிறார்..... 21-Aug-2016 7:01 am
நிதர்சனமான வரிகள்..கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் உலகில் எல்லாமே நாடக மேடை தான் 21-Aug-2016 6:48 am

வளர்க்கத் தெரியாத தாய்
அடக்கத் தெரியாத தந்தை
போதிக்கத் தெரியாத குரு
பண்படுத்தாத கல்வி
கட்டுப்படுத்தாத நட்பு
வட்டம்
கண்டுகொள்ளாத பாதுகாப்புச் சூழல்
இவைகளின் மொத்த ரூபமாய் மறைந்து நிற்கிறான் இளம்பெண்ணைக் கொன்ற அந்த மனிதப் போலி..!!!

மேலும்

உண்மையே. வாழ்த்துக்கள் ..... 29-Jun-2016 7:35 am
ஆரோக்கிய அலெக்சாண்டர் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2015 3:17 pm

மக்களின் வாக்கை வாழ்க்கையென
வாழும் ஒருவன் எங்கிருக்கிறாரோ?

மக்களின் எதிர்பார்ப்பை அப்படியே
நிகழ்த்தும் ஒருவன் எங்கிருக்கிறாரோ?

மக்களின் தேவையைச் சொல்லாமலே
அறியும் ஒருவன் எங்கிருக்கிறாரோ?

மக்களின் வாழ்க்கையில் ஒன்றென
கலக்கும் ஒருவன் எங்கிருக்கிறாரோ?

மக்களின் மனதைப் புரிந்துச்
செயலாற்றும் ஒருவன் எங்கிருக்கிறாரோ?

அரசியல் என்பதைப் உணர்ந்து
ஆளும் ஒருவன் எங்கிருக்கிறாரோ?

வீண் புகழாரங்களை வெறுத்து
ஒதுக்கும் ஒருவன் எங்கிருக்கிறாரோ?

மக்களின் தொண்டையே நோக்கமாகும்
கொன்டிருக்கும் ஒருவன் எங்கிருக்கிறாரோ?

மொத்தத்தில் மக்களாட்சியை மக்களாட்சியாய்
நடத்தும் ஒருவன் எங்கிருக்கிறார

மேலும்

விடாத மழை
விடிய விடிய மழை
வீட்டை விட்டே வெளியேறச்
சொல்லும் மழை!

'ஏரியா'க்களாக மாறியிருந்த ஏரிகள்
மீண்டும் ஏரிகளாகவே
மாறிய அதிசயம்!

'பார்'களில் மட்டும்தான் சமத்துவம்
என்று இனி யார் சொல்வார்கள்
உயிரைக் காக்க
உதவிடுபவர்களை பார்த்தபின்பு!

மழைநீர் ஏரி நிரப்பி
மடைதிறந்த வெள்ளம்
மக்களின் மனங்களைத் திறந்தது!

ஒருபுறம் முழ்கும் கைகள்
மறுபுறம் அதைக் காக்கும் கரங்கள்!

பிரிவினையைத் தூக்கி எறிந்துவிட்டு
கைகோர்த்து தூக்கி நிறுத்திவிட்டு
உள்ளதை முழு உள்ளத்தோடு பகிர்ந்துவிட்டு
தொடர்ந்து அறப்பணி நடக்கிறது தூக்கம்கெட்டு

சென்னையில் மழைவெள்ளம் வடிந்தது -- ஆயினும்
அன்பு வெள்ள

மேலும்

உண்மைதான்.அன்பு என்ற அணையை இயற்கை கூட வெல்ல முடியாது 14-Dec-2015 12:18 am

'தன்மை' எனும் சொல் தன்னைப் பற்றியப் பண்புகளைக் குறிப்பிடுவதாய் அமைகிறது. தன்னைப் பற்றிக் குறிப்பிடும் வகையில் தனக்கு மட்டுமே உரியப் பண்பைத் தனித்தன்மை எனக் குறிப்பிடலாம். 'பண்' என்பதைச் 'சீர்' என்று அர்த்தம் கொண்டு 'பண்பு' என்பதைச் சீரானத் தன்மை அல்லது சீரானப் பழக்கம் என்று அர்த்தம் கொள்ளலாம். ஆக தனித்தன்மை என்பது தன்னிடம் மட்டுமே உள்ள நல்ல அல்லது சீரானப் பழக்கம் எனலாம்.

நமது தனித்தன்மை நமக்குள் எப்படித் தோன்றுகிறது? அது பிறப்பிலா?? இல்லை வளர்ப்பிலா? தனித்தன்மையின் தோற்றம் இயற்கையானதாகவோ தூண்டப்பட்டதாகவோ அல்லது விபத்தாகவோ இருக்கலாம். இயற்கையில் தோன்றும் தனித்தன்மை என்பது மிகுந்த ஆற்றல் தி

மேலும்

வயலும் வயல்சார்ந்த இடமும்
மருதத்திணை என்பது அக்காலத்தே!
வயலும் வயல்சார்ந்த இடமும்
மருதம் ரியல் எஸ்டேட் ஆனது இக்காலத்தே!

மேலும்

அறிவோ உழைப்போ அநீதியோ
சேர்த்துவிட்டார்கள் சொத்தையெல்லாம்!
உள்நாட்டு வளங்களையெல்லாம்
வெளிநாட்டு வங்கிகளில் பணமாக!

ஒருவேலைக்குக் கூட உணவில்லாமல் ஒருபக்கம்
ஒருநூறு ஜென்மத்திற்கும் சேர்த்தவர்கள் மறுபக்கம்
அரசாங்கத்தை ஏமாற்றியதால் அது கறுப்புப் பணம்
மக்கள்தானே அரசாங்கம் என்றால் ஏமாற்றியதும் மக்களே!

நாட்டுக்கடனை கண்டுகொள்ளாத தேசத்துரோகிகள்
நாட்டுக்கடமையை ஆற்ற மறந்த குற்றவாளிகள்
இந்திய வல்லரசு இலக்கை இடைமறிக்கும் இழியர்கள்
முந்திக் கொள்ளையடிக்கும் கௌரவத் திருடர்கள்!

ஏன் எதற்கு என்றெல்லாம் நோக்கமில்லை
பொருளாதாரப் போட்டியில் முதலிடமே நோக்கு
அடைந்தவுடன் அவர்கள் அடைவது என்னவகையில் ஆனந

மேலும்

பண்டைய தின்பண்டமெல்லாம்
தொண்டையில அடைக்குது!
இன்றைய தின்பண்டமெல்லாம்
மண்டையில ஏறுது!

செட்டிநாட்டுக்கோழி வறுவல்
புதுசா இருந்தும் மதிப்பு குறையுது
மேல்நாட்டுக்கோழி வறுவல்
செத்தே மாசமாகியும் விலை உயருது!

ரேஷன்கடையில மக்கள் வரிசையில் நின்னு
அரிசி சக்கரை வாங்க தயங்குது
வெளிநாட்டுக்காரன் வைச்ச கடையில, கண்ணு
வறுத்த கோழிக்கு வரிசையில நிக்குது!

கேழ்வரகு அடையை அடகு வைச்சுட்டு
மைதா அடையை அடைய ஊர்விட்டு
ஊர்சென்று நாகரிக கொக்கரிக்கும் இளையவர்
உயர்வகுப்பின் வாழ்க்கை முறையாய் கொண்டாடுகிறார்!

சிறுதானிய உணவின்முறை மறக்கடிக்கப்பட்டு
வறட்சியின்போது உணவுப்புரட்சியின் பெயராலே
அரிசியில் ம

மேலும்

நன்றி அத்தான் 20-Oct-2014 9:38 am
விசம் உணவு பழக்கம் மற்றொன 19-Oct-2014 11:21 pm
அருமையான கவிதை 19-Oct-2014 11:17 pm
பண்பாடு என்பதற்கு பண்படுதல் என்று பொருள். கலாச்சாரம் எனபது இனம் சாரந்த பழக்கவழக்கம் என்று பொருள் கொள்வதே மிகப்பொருத்தமாய் இருக்கும். 19-Oct-2014 11:08 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

ராம்

ராம்

காரைக்குடி
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
சீனி அலி இப்ராஹிம்,

சீனி அலி இப்ராஹிம்,

பெரியபட்டினம்.

இவர் பின்தொடர்பவர்கள் (16)

user photo

nuskymim

kattankudy
சீனி அலி இப்ராஹிம்,

சீனி அலி இப்ராஹிம்,

பெரியபட்டினம்.
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (17)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
user photo

nuskymim

kattankudy
மேலே