கறுப்புப் புதையல்
அறிவோ உழைப்போ அநீதியோ
சேர்த்துவிட்டார்கள் சொத்தையெல்லாம்!
உள்நாட்டு வளங்களையெல்லாம்
வெளிநாட்டு வங்கிகளில் பணமாக!
ஒருவேலைக்குக் கூட உணவில்லாமல் ஒருபக்கம்
ஒருநூறு ஜென்மத்திற்கும் சேர்த்தவர்கள் மறுபக்கம்
அரசாங்கத்தை ஏமாற்றியதால் அது கறுப்புப் பணம்
மக்கள்தானே அரசாங்கம் என்றால் ஏமாற்றியதும் மக்களே!
நாட்டுக்கடனை கண்டுகொள்ளாத தேசத்துரோகிகள்
நாட்டுக்கடமையை ஆற்ற மறந்த குற்றவாளிகள்
இந்திய வல்லரசு இலக்கை இடைமறிக்கும் இழியர்கள்
முந்திக் கொள்ளையடிக்கும் கௌரவத் திருடர்கள்!
ஏன் எதற்கு என்றெல்லாம் நோக்கமில்லை
பொருளாதாரப் போட்டியில் முதலிடமே நோக்கு
அடைந்தவுடன் அவர்கள் அடைவது என்னவகையில் ஆனந்தம்?
முடிந்தவுடன் அவர்கள் அடைவதும் ஒரேவகைப் பெட்டியோ? கொள்ளியோ? மின்னோ?
பிடிபட்டவர் உடைமைகளை நாட்டு உடைமையாக்கலாம்
விடுபட்ட அடிப்படை கிராமத்தையும் விவசாயத்தை வளர்க்கலாம்
நகருக்கு இணையான வசதிகள் செய்யப்படலாம்
கிராமங்கள் அழிவது தடுத்து நிறுத்தப்படலாம்
எதுஎது எவரெவருக்குக் சேரவேண்டுமோ சேர்ப்போமோ
கறுப்புப் பணப் புழக்கத்தைக் குறைப்போமே!
வரிவிதிப்பில் திட்டங்களும் திருத்தங்களும் தேவையே
உணர்ந்து நடைமுறைப்படுத்தினால் திருப்பங்களும் உண்மையே!!!