கவிதை
வயது ஒன்று
நட்பு,காதல், உறவுக்கு
ஏங்கும்
ஊமை மனிதனின்,
பின்னணி பாடிய
'கவிதைக்காரி'
உலகம் தொட்ட
ஒன்றாம் ஆண்டு...
வெற்று பேப்பரில்,
வலைதள ஆழியில்,
மலட்டுப் பென்சிலுக்கு
முதல் பிரசவம்
நான் பார்க்க,
மாதம் முழுதும்
சிசேரியன்,சுகமுமாய்
எழுத்துக் குழந்தையை
தாளில் தவழவிட்டு,
கண்மை பூசிய
கவிதை பிஞ்சுடன்,
பென்சில் தாயும்
உள்ளம் பூத்தது...
வருடம் ஒன்றோடி,
வாழ்க்கை முதிராகி,
இழப்பு ரேகைகள்
மனத்தடத்தில் முத்தமிட,
கண்களின் சிரிப்புக்கு,
சித்திரம் பல தீட்டி,
வாழ்க்கை ரசனைகள்,
மனநிலத்தில் பயிரிட்டு,
அடடா! உயிர்களை ரசிக்கும்
உன்னத நிமிடம்,
உணரத்தான் வேண்டும்
ஒரு நிமிடம் உள்ளோர்
அழுகை?ஆமாம்!
சிரிப்பும்?ஆமாம்!
உயரப் பறக்க
உறவும் ஆமாம்!
இழந்தேன் பலவும்
நட்பு,காதல்
நண்பன்,சிரிப்பு
மானம் மதிப்புடன்
என்னையும் சேர்த்து
முகத்திரை அணிந்து,
உண்மை பூட்டி,
சாவி தொலைக்கும்
சதுரங்க ஆட்டம்,
இதயப் பகடை
உருட்டல் தொடங்கி,
நண்பனிடம் மறைக்கும்
நடிகன் வேடமுடன்
உறுதுணை ஒன்றை
தேடி ஓடுகிறேன்
வாழ்க்கை சரடிலே
ஒலிம்பிக் ஓட்டம் ...
இத்தனையும் துயரென
அழுத கணம்போய்
இதுதான் வாழ்க்கை
அழகென உணர்கையில்,
என்னை காண்கிறேன்
இதயத்துகளின்
இன்னிசை இயல்களில்...
பென்சில் முனை யுடைக்க
கை ஓங்கிய கணநொடியில்
அசரிரி சேர்த்தது
அஞ்சல் ஒன்றை
"கவிதை மன்றங்களில் பென்சில்கள் உடைவதில்லை"-JK