மருத்துவம் மறந்தோம்
உணவையே மருந்தாய் உட்கொண்ட காலம்போய்
மருந்தையே உணவாய் உட்கொள்ளும் காலமிது!
பாட்டியை கிராமத்தில் ஒளித்துவிட்டு
பாட்டி வைத்தியத்தைத் இணையத்தில் தேடும் காலமிது!
பாட்டனும் பூட்டனும் சேர்த்த சித்த வைத்தியத்தை
வெள்ளைக் கோட்டிற்கு அடகு வைக்கும் காலமிது!
அப்பனையும் அம்மையையும் காப்பத்தில் விடுவிட்டு
நாமோ மருத்துவமனையில் சரணடைந்தோம்!
பத்தியத்தில் வைத்தியம் செய்து சாதித்தவரெல்லாம்
அலைவரிசையில் கூவி அழைக்க வைத்திட்ட காலமிது!
வெள்ளைக்காரர்களுக்கு நாம்தான் அடிமைப்பட்டிருந்தோம்
நமது வைத்தியத்தை ஏன் மறந்துப் போனோம்?
பண்டிகைகளுக்கு பலகாரம் செய்யும்போதே அதற்கான
உபாய மருந்தையும் சேர்த்தே செய்துவைத்தோம்!
விளம்பரங்களில் மயங்கி வீணாய் போனோம்
மருத்துவ மனைக்கும் விளம்பரங்கள் வரத்தான் செய்கிறது!
சுய ஒழுக்கமும் சுய அறிவும் ஏற்க மறந்தோம் -- ஆனால்
கவுண்டரில் ஓடிப்போய் கேட்டதை உடனேக் கட்டினோம்!
காசைக் கண்டால் நீதியும் வழுவும் காலத்தே
எதை நம்பி நாம் மருத்துவம் பார்த்தோம்
கைத்தொழும் உயிர்காக்கும் மருத்துவர்கள் பெரும்பாலானவர்கள் இருக்கையில்
கையூட்டாய் பணம்பார்க்கும் வெட்டியான்களும் இருக்கவே செய்கிறார்கள்!