இறகு முளைத்த கவிதை
துடிப்பற்று நிற்கிறது
கண்ணாடியாய் நிலைத்த
நிலவு.
இலைகளில் உருளும்
இருள் கிளர்ந்து
விரிகிறது நிழல்.
நீரில் ஊர்ந்து
ஓயாத வட்டத்தில்
சுழல்கிறது
கனவுகள் உடையாத
நீர்க்குமிழி.
இடைவிடாப் பேரதிர்வில்
மொக்குகளுக்குள் புதைகிறது
காலை விரியும் புதிர்.
நிச்சலனமாய்....
உணர்வுகளின் பெருந்திசையில்
இறகு முளைத்துச் சிரிக்கிறது....
கவிதை.