தடுமாறும் தருணங்கள்

தடுமாறும் தருணங்கள்....

நடை பயிலும் வேளை
தடுமாறி தடுக்கிடும் முன்னே
கரம் கொடுத்து நடை பழக்கினார்
என் தந்தை...
அவர் தளர்வுற்று நடந்திட தடுமாறிய
வேளை கைகழுவிவிட்டு வந்தேன்
முதியோர் இல்ல வாசலிலே....

உணவு என்று கேட்கும் முன்னே
ஊட்டி விட்டாள்...
மனம் ஒரு நிலையின்றி தடுமாறிய
நேரங்களில் என் மனதறிந்து
தோள் கொடுக்கும் தோழியாய்
என் துயர்கள் அவளும்
துடைத்துவிட்டாள்...

கையேந்திட விடாமல் வளர்த்திட்டாள்
ஒரு வாய் சோற்றுக்கு கையேந்த வைத்தே..
எதையும் தாங்கிடும் என் அன்னையை
முதல் முறை தடுமாறிடும் நிலைக்கு
தள்ளினேன் நானும்...

மயிர் நரைத்து உடல் சோர்ந்து
முதுமையில் அடுத்தவன் கரம் பார்த்து
தடுமாறி நிற்கிறேன்....
விழிமூடும் என் கண்களுக்குள் என்
பெற்றோர் முகம் கண்டு
தலை குனிந்து நிற்கிறேன்....

எழுதியவர் : அன்புடன் சகி (28-Oct-16, 6:10 pm)
பார்வை : 193

மேலே