எது தீபாவளி

எது தீபாவளி ?

இன்று நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

இமயம் முதல் குமரி வரை இந்தப் பண்டிகை கொண்டாடப் படுகிறது என்றாலும், பண்டிகைக்கான அடிப்படைக் காரணங்களும், தாத்பரியங்களும், கொண்டாடப்படும் கால நீட்சியும் சற்று வேறுபடும். இந்த வேறுபாடுகளுக்கு இடையேயும் இந்தியப் பண்பாடு , இவைகளை இணைத்துச் செல்லும் ஒரு வலுவான சங்கிலியாக இருப்பதை உணர்கிறோம்.

இந்த நாளில் அறியாமை இருள் நீங்கி, உண்மை அறிவொளி நம் மனதில் உதிக்க வேண்டுவோம். இந்த வேண்டுதலோடு ஒரு பாடல்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.




கிருட்டிணன் தன்மனைவி பாமையுடனே+ + sathyabhama
நரகனுடன் போரிட்டுக் கொன்ற நாளோ?@
இரகுராமன் ராவணனை வதைத்த பின்னே
திரும்பவும் அயோத்தி நகர் மீண்ட நாளோ?#

துலக்கி நம் வீடுகளை தூய்மை செய்தே
இலக்குமியை வீட்டுக்கு அழைக்கும் நாளோ?^
மார்வாரி மக்கட்கோர் ஆண்டு முடிந்து
மாறியோர் புத்தாண்டு தொடங்கும் நாளோ?*

அரசன் ஜஹாங்கீரின் சிறையிலிருந்து
குருகோ விந்தர்விடு பட்ட நாளோ?$
இருபத்தி நான்காம் தீர்த்தங் கரர்
நிருவாணம் அடைந்துயிர் துறந்த நாளோ?%

வாமனன் மாபலியை வென்ற நாளோ?^^
யமனை அவன் தங்கையும் வாழ்த்தும் நாளோ?**
எவருக்கு எதுவா யிந்நாள் இருப்பினும்
தவறாமல் தீபங்கள் ஏற்றித் தொழினும் + +(தொழுதாலும்)

தமசெ+ன்னும் அறியாமை இருளை விலக்கி + tamas
நமதுமனத் துள்ளுமொளி விளக்கேறும் நாள் ***
உண்மையாய் தீவளித் திருநாள் அன்றோ?
அன்னாளும் நாளைவர இறை அருள்கவே!



@- for most south Indians

#- for most North Indians

$ - for Sikhs- Bandai Chor Diwas

%- For Jains

^- for many in North and west

*- for Rajasthanis and many in west

^^ Kerala

**- Bhav Bheej

***- Tamaso maa jyothir gamaya

எழுதியவர் : ரமேஷ் (கனித்தோட்டம்) (28-Oct-16, 6:50 pm)
பார்வை : 62

மேலே