மஹாத்மா காந்தி- லால்பகதூர் சாஸ்திரி- காமராஜ்

இன்று தேசத்தந்தை காந்தியின் பிறந்தநாள்
அஹிம்சை ஒரு மானிடப்பிறவி எடுத்த நாள்
குஜராத்துக்கு சிறப்பைக் கூட்டிடும் ஒரு நாள்
இந்தியாவை உலகுக்குக் காட்ட உகந்த நாள்

எளிமையின் உருவமே லால்பகதூர் சாஸ்திரி
பால், பசுமை புரட்சிகளுக்கு இவர் முன்னோடி
நாணயம் இவரின் மூச்சு நேர்மை இவர் பேச்சு
முடிவிலும் வறுமை கண்ட இவர் பிரதமமந்திரி

எளிமையில் லால்பகதூருக்கு அண்ணன் இவர்
நாணயத்தில் அவர் அப்பனுக்கு அப்பன் இவர்
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பு இவர்
இம்மாநிலத்து மக்களாலேயே ஒதுக்கப்பட்டவர்

எந்த ஒருவரும் பிறக்கையில் சும்மா ஒரு ஆத்மா
அஹிம்சையின் வாரிசு காந்தி இவர் மஹாத்மா
அவ்வளவு எளிமை சாஸ்திரி அவரும் மஹாத்மா
காமராஜ் என்றால் நாணயம் இவரும் மஹாத்மா

எவ்வளவோ தலைவர்கள் பிறந்து மடிகிறார்கள்
கோடியில் சிலர் கடவுளுக்கு அடிபணிகிறார்கள்
இம்மூவரும் நாட்டுக்கு தமை அர்பணித்தார்கள்
காமராஜ் அன்று போனார் மற்றவர் பிறந்தார்கள்

அஹிம்சை எப்படியிருக்கும் என்று கேட்கக்கூடாது
எளிமையைக் கண்டுபிடி என புதிர் போடக்கூடாது
நாணயம் என்றால் காசுதான் என விளக்கக்கூடாது
இவையின்றி மெய்ஞானம் ஒருபோதும் கைகூடாது

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (2-Oct-24, 2:30 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 5

மேலே