அமைதியாய் ஒரு ஆத்மா

அமைதியாய் ஒரு ஆத்மா

எப்பொழுது எடுப்பார்கள்?
என்று
நேரம் காட்டியை
உற்று பார்த்து
பரபரப்பாய் பறந்து
கொண்டிருக்கும்
மனித கூட்டங்கள்
நிறைந்திருந்த
அந்த கூடத்தில்

பொறுமையாய்
எவ்வித முக
சுழிப்புமின்றி
படுத்து கிடந்தது
இறந்து விட்ட
ஒரு மனித ஆத்மா

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (20-Sep-24, 11:57 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 133

மேலே