கனித்தோட்டம் ரமேஷ் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கனித்தோட்டம் ரமேஷ் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 273 |
புள்ளி | : 113 |
முதுநிலைப் பொறியியல் கல்வி முடித்து 43 ஆண்டுகள் பணி செய்து சென்ற வருடம் ஒய்வு பெற்றேன். இந்த வருடம் ( 2015) முதல் தமிழ் எழுதும் முயற்சியில் இறங்கி இருக்கிறேன். kanithottam.blogspot.com என்ற எனது பதிவில் இரண்டு மாதங்களாக கவிதைகளைப் பதித்து வருகிறேன்.ezhuthu.com மூலம் தமிழ்ப் படைப்பாளிகள் பலர் படைப்புகளை படித்து ரசிக்க ஆவல்.
ப்லாக்ஸ்பாட்-இல் கனித்தோட்டம் என்ற முகவரியின் கீழ் படைப்புகளை வெளியிட்டு வருகிறேன்.
இரண்டு மாதம் கோடை விடுப்பில்
-----வந்தாள் அமெரிக்கப் பேத்தி.
தமிழில் பேசக் கற்றுக் கொடுக்க
-----முயன்றாள் நம்மூர்ப் பாட்டி
இரண்டு மாதம் ஆனபின்னே
-----பேத்தி திரும்பிப் போச்சு.
பாட்டி இப்போ அமெரிக்கன் இங்கிலீஷில்
-----பொளந்து தள்ளல் ஆச்சு!
நித்தம்நித்தம் நீர்பாச்சி
நான்வளத்த தென்னமரம்
பக்கத்து வீட்டுப்பக்கம்
தலைசாச்சு குலபோட
குலபோட்ட காயையெல்லாம்
களவு செஞ்சானே !- அதை
போனாப்போ கட்டுமின்னு
வுட்டுப் புட்டேனே
மாங்கன்னை நான்நட்டு
மல்கோவா மரம் வளத்தேன்.
மதில்தாண்டி மரக் கிளைகள்
அவன்வீட்டு மாடியிலே
பழமாக பழுத்துத் தொங்க
பரிச்சு தின்னானே - அதயும்
போனாப்போ கட்டுமின்னு
வுட்டுப் புட்டேனே
வேலிக்குப் பக்கம் நட்ட
எலுமிச்சஞ் செடியினிலே
பச்சமஞ்ச நிறமாக
காச்சிருந்த பழமெதையும்
மிச்சம்மீதி வெக்காமல்
பறிச்சுக் கொண்டானே - அதயும்
போனாப்போ கட்டுமின்னு
வுட்டுப் புட்டேனே
தளத்தில் முன்புபோல் இல்லாமல் எல்லோருடைய பதிவுகளுக்கும் மிகவும் குறைந்த கருத்துக்கள் வரக் காரணம்?
பேத்திகளுக்குப் புரிவதில்லை
பேத்திகளுக்குப் புரிவதில்லை
கவிதை எழுதுகிறேன் என்ற பெயரில்
வெள்ளைத் தாள்களில் கிறுக்கிக் கிறுக்கிக் கிழித்துப் போடும் தாத்தாவைத் திட்டாத அம்மா
தான் செய்தால் மட்டும் ஏன் திட்டுகிறாள் என்று !
வாழ்க்கையின் பக்கங்கள் ...
மிகவும் குழப்பமானவை .
எது நல்லது எது கெட்டது
என தெரியாக்கோணங்களில்
வாழ்க்கையின் பக்கங்கள் ...
மிகவும் பயங்கரமானவை .
தவறென்றே தெரியாமல் செய்த தவறுக்கு
தண்டனை வலுப்பெறும் வேளைகளில்
வாழ்க்கையின் பக்கங்கள் ...
மிகவும் ஆபத்தானவை .
கூடா நட்பு கொண்டு
குறிக்கோள் இழந்து வாழத்தூண்டுகையில்
வாழ்க்கையின் பக்கங்கள் ...
மிகவும் இலேசானவை
கவலைகள் கோடி இருந்தாலும்
அதை மறந்து
மனம் சிரிக்கும் மனிதர்களுக்கு
வாழ்க்கையின் பக்கங்கள் ...
மிகவும் மகிழ்ச்சியானவை
இளமை தடுமாறும் சூழலில்
தடம் மாறாமல் போகும் பாதைகளில்
வாழ்க்கையின் பக்கங்கள்...
மிகவும் ர
ரசவாதம்
காலையில் விழிக்கும்போதே கனத்த மனத்துடன் எழுகின்றேன்!
இன்னொரு நாளைக் கடக்க வேண்டுமே என்ற சோர்வோடும்,
எப்படிக் கடக்கப்போகிறேன் என்ற கலக்கத்தோடும் !
நேற்றுச் செய்யத் தவறிய கடமைகள்
கழுத்தில் கட்டிய கல்போல் சுமக்கின்றன.
செய்தாகவேண்டும் என்ற புரிதலுக்கும்
செய்யாதே எனத்தூண்டும்
மனத்தின் மறுதலிப்புக்கும்
இடையே நடக்கும் போராட்டமாக
நாள் ஊர்ந்து நகர்கிறது.
நிமிடங்களாக நீளத் தயங்கும் நொடிகளையும்
மணிகளாய் மாற மறுக்கும் நிமிடங்களையும்
எப்படியோ தாண்டி
ஓரு நாளைக் கடந்து
மீண்டும் இரவில் போர்வைக்குள் புகுந்துகொள்கிறேன்.
ஒவ்வொருநாளும் இப்படி நகர மறுக்கின்றபோதும்,
ரசவாதம்
காலையில் விழிக்கும்போதே கனத்த மனத்துடன் எழுகின்றேன்!
இன்னொரு நாளைக் கடக்க வேண்டுமே என்ற சோர்வோடும்,
எப்படிக் கடக்கப்போகிறேன் என்ற கலக்கத்தோடும் !
நேற்றுச் செய்யத் தவறிய கடமைகள்
கழுத்தில் கட்டிய கல்போல் சுமக்கின்றன.
செய்தாகவேண்டும் என்ற புரிதலுக்கும்
செய்யாதே எனத்தூண்டும்
மனத்தின் மறுதலிப்புக்கும்
இடையே நடக்கும் போராட்டமாக
நாள் ஊர்ந்து நகர்கிறது.
நிமிடங்களாக நீளத் தயங்கும் நொடிகளையும்
மணிகளாய் மாற மறுக்கும் நிமிடங்களையும்
எப்படியோ தாண்டி
ஓரு நாளைக் கடந்து
மீண்டும் இரவில் போர்வைக்குள் புகுந்துகொள்கிறேன்.
ஒவ்வொருநாளும் இப்படி நகர மறுக்கின்றபோதும்,
தோல்வியை ஒப்புக் கொள்வாய்
+++துவண்டுநீ போக மாட்டாய்!
சால்வையாய்ச் சங்க டத்தைச்
+++ சற்றது மூடி வைக்கும்;
மேலும்நீ எடுக்க வுள்ள
+++முயற்சிகள் உனக்குள் தோன்றும்;
பாலமில் லாத போதும்
+++பயிற்சிகள் முயற்சி கூட்டும்!
அயர்ச்சியை விலக்கி வைக்க
+++அனுதினம் பழகிக் கொள்க!
முயற்சிக்குக் கைகொ டுப்பார்
+++முன்வைத்துச் செயல்கள் செய்க!
துயர்ச்சிறை விலகிப் போகும்
+++ துன்பமும் உதவி யாகும்!
பெயர்ச்சியால் தீர்வு கிட்டும்
+++பேதமை எண்ணம் நீக்கு!
===== +++++ ==========
காற்றுக் குழந்தை
===================
மூங்கில் முளைப்பதற்கு
முன்னதாகவே பிறந்திருந்தது
நாம் புல்லாங்குழல் செய்வோம்
என்று அறிந்திராத காற்று.
**
நம் சங்கீத ஸ்வரங்களுக்கு
முன்னதாகவே அவை
பாடியிருந்தன பாட்டு.
*
தென்றலாய் புயலாய் பல்வேறு
வடிவங்களில் பெயர்மாறி ஓரிடத்தில்
நில்லாதலைந்து திரியும்..
*
ஒரு கைதியைப்போல
அடைந்துகிடாக்காத காற்றை
வாடகைக்கு வாங்கிய நாம்
சொந்தமாக வைத்துக்கொள்ள
நினைக்கும் சுயநல பேராசைக்கு அது
அடிபணியாமல் தன்போக்கில்
தன் சுதந்திர பாதையில் போய்விட முடிவில்
நாம் மரணத்தின் வண்டியில் ஏறி
வேற்றுலகு செல்கிறோம்
*
கல்யாணம் கட்டிக் கைகழுவும்
காரிய
வாக்குகேட்கும் காலங்களில் வாசலெங்கும் சென்று
=வணக்கங்கள் போட்டிட்ட வக்கற்றக் கொள்கை
வாக்காளன் கரங்கூப்பி வணக்கமிடும் நேரத்திலே
=வக்கணையாய் பார்த்தொதுங்கும் வசதியுள்ளக் கொள்கை
மூக்கற்ற வேளையிலே முதுகினிலே கழிவுகளின்
=மூடைகளை சுமக்கையிலே முடையறியாக் கொள்கை
நாக்கற்ற முதலைகளாய் நாட்டுக்குள் நடமாடி
=நமையிங்கு ஏப்பமிட நடித்தடிக்கும் கொள்ளை.
பார்வைக்கு அழகானப் பாசமெனும் வேலியிலே
=பதுங்கிப்பல நிறமெடுக்கும் பச்சோந்திக் கொள்கைப
போர்வைதனை போர்த்தியிங்கு புறப்பட்ட பலபேரில்
=புகழ்பூத்து வாழுதன்றோ பொல்லாத கொள்கை
கார்காலம் வெளிவந்து கத்துகின்றத் தவளைகளாய்
=கத்துமொரு காலம்வரக் காத
ஆற்றோரப் பாதையெல்லாம் அடர்ந்தமரம் பூச்சொரியும்
காற்றோடு நாணலதும் காதலுடன் வீசிவிடும்
சேற்றோடு விராலுடனே சேல்கெண்டை போட்டியிடும்
ஊற்றெடுக்கும் நினைவுகளில் உள்ளமதும் உடன்செல்லும் !
இணைபிரியா அன்னங்கள் இன்பமுடன் நீந்திவரும்
பிணையுடனே கலைமானும் பிரியமுடன் நீர்குடிக்கும்
துணையிருக்கும் வான்நிலவும் துயிலாமல் விழித்திருக்கும்
அணைபோட்டுத் தடுத்தாலும் அடங்கிடுமோ நதியோ(யா)சை ?
ஒற்றைக்கால் கொக்குகளும் உணவுக்காய் தவமிருக்கும்
நிற்காமல் தவழ்கின்ற நீரலையில் நுரைபூக்கும்
பொற்கிரணக் கதிர்விரிய புதுவெள்ளம் புன்னகைக்கும்
சுற்றிவரும் வழியெங்கும் சுகராகம் மீட்டிடுமே !
கனவிலே பெண்ணொன்று இன்றிங்கு கண்டேன்
இணையிலா அவளழகைக் கண்டே வியந்தேன்!
முற்றும் அதை சொல்லுரைக்க முடியாது எனினும்
சற்றேனும் சொல்லியோர் கவிதை படிப்பேன்.
கருங்குழல் கரையிட்ட பிறை நுதல் நெற்றியோ?
மருங்கினிரு மந்தார இலையொத்த மடல்களோ?
மருளும் மான் விழிபழிக்கும் கருநீலக் கண்களோ?
மருவற்ற முகம் நடுவில் விரிந்த நீள் நாசியோ?
சிருங்கார ரசம் சிந்தும் சிந்தூரச் செவ்விதழ்கள்
விருந்துண்ண வாவென்று வரவேற்கும் கனியோ?
மின்னலென இதழ்.இடையில் மின்னும் ஒளிக்கீற்று
புன்னகையோ , கோத்தெடுத்த நல்முத்துச் சரமோ
கன்னக் கதுப்புமாங் கனிதந்த மொய்யோ ?
எண்ணரும் எழில் முகம்., இது என்ன மெய்யோ?
ஒளிர்