வாழ்க்கையின் பக்கங்கள்
வாழ்க்கையின் பக்கங்கள் ...
மிகவும் குழப்பமானவை .
எது நல்லது எது கெட்டது
என தெரியாக்கோணங்களில்
வாழ்க்கையின் பக்கங்கள் ...
மிகவும் பயங்கரமானவை .
தவறென்றே தெரியாமல் செய்த தவறுக்கு
தண்டனை வலுப்பெறும் வேளைகளில்
வாழ்க்கையின் பக்கங்கள் ...
மிகவும் ஆபத்தானவை .
கூடா நட்பு கொண்டு
குறிக்கோள் இழந்து வாழத்தூண்டுகையில்
வாழ்க்கையின் பக்கங்கள் ...
மிகவும் இலேசானவை
கவலைகள் கோடி இருந்தாலும்
அதை மறந்து
மனம் சிரிக்கும் மனிதர்களுக்கு
வாழ்க்கையின் பக்கங்கள் ...
மிகவும் மகிழ்ச்சியானவை
இளமை தடுமாறும் சூழலில்
தடம் மாறாமல் போகும் பாதைகளில்
வாழ்க்கையின் பக்கங்கள்...
மிகவும் ருசிகரமானவை
வெற்றி தோல்வி இரண்டையும்
ரசிக்கத்தெரிந்த உள்ளங்களுக்கு
வாழ்க்கையின் பக்கங்கள் ...
மிகவும் சுலபமானவை
ஓர் எல்லையை வகுத்து
அதற்குள் வாழும் வேளைகளில்
வாழ்க்கையின் பக்கங்கள் ...
மிகவும் குதூகலமானவை
போட்டு வைத்த எல்லைக்கோடுகளை
தாண்டும் சமயங்களில்
வாழ்க்கையின் பக்கங்கள் ...
மிகவும் அழகானவை
நம் உள்ள ஆழம் புரிந்த நட்போடு
உரையாடும் வேளைகளில்
வாழ்க்கையின் பக்கங்கள் ...
மிகவும் இனிமையானவை
இரவு பகலாக உழைத்து
நம் குறிக்கோள் அடையும் தருணங்களில்
வாழ்க்கையின் பக்கங்கள் ...
மிகவும் ஆச்சிரியமானவை
எதிர்பார்த்தஒன்று நம்மை ஏமாற்றிய போதும் ,
எதிர்பார்க்காத ஒன்று நம்மை ஏற்றுக்கொள்ளுகையில்
வாழ்க்கையின் பக்கங்கள் ..
மிகவும் கொடுமையானவை
பிடிக்காத ஒன்றை பிரியத்தோடு செய் என்று
பிரியமானவர் சொல்லுகையில்
வாழ்க்கையின் பக்கங்கள் ..
மிகவும் கசப்பானவை
நம்பிக்கையோடிருந்த உறவு நம்மை
நடுத்தெருவில் விட்டுச்செல்லும் நிமிடங்களில்
வாழ்க்கையின் பக்கங்கள் ..
போற்றத்தக்கவை
இவையெல்லாம் உணர்ந்து வாழுகையில்.